நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக ரூ.1.5 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்... கடைசியா சார்ஜ் போட்டதையே மறந்துடுவீங்க
ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. முடிந்தவரையில் நாடு முழுவதும் தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் ரிவோல்ட் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டு உள்ளன. எந்த தனியார் நிறுவனம் அது என்பதையும், டெலிவிரி செய்யப்பட்டுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிவோல்ட் மோட்டார்ஸ், இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஆனால் தற்போதைக்கு இந்த நிறுவனத்தில் இருந்து ஆர்வி400 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் பைக் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சேல்ஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த வேண்டுமெனில், அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் ஆதரவும் அவசியமாகும்.

இதனை நன்கு புரிந்து வைத்துள்ள ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை புது, புது தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில், ஃப்ளோராமேக்ஸ் (Floramax) என்கிற ஊட்டச்சத்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஃப்ளோராமேக்ஸ் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஃப்ளோராமேக்ஸ், பெண்கள் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் விளைவாக, இந்த நிறுவனத்தில் நிறைய பெண் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அதேநேரம், இதர வேலைகளுக்காக இருக்கும் ஆண் பணியாளர்களின் அன்றாட பயன்பாட்டிற்காக ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் வாங்கப்பட்டுள்ளது. கவர்ச்சிக்கரமான குறைந்த மாதத்தவணை, ஜீரோ டவுன் பேமண்ட் உள்ளிட்ட காரணங்களுக்காக ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கியுள்ளதாக ஃப்ளோராமேக்ஸ் நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்திற்கு 10 ஆர்வி400 இ-பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட காரணங்கள் மட்டுமின்றி, ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் குறைவான இயக்க செலவும் ஃப்ளோராமேக்ஸ் நிறுவனம் இந்த பைக்கை தேர்வு செய்திருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆர்வி400 பைக்கின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் டெலிவிரி நிகழ்ச்சியில் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் வட இந்திய விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி ஹரிஷ் கௌசிக் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸின் எலக்ட்ரிக் வாகன பிரிவாக விளங்கும் ரிவோல்ட் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆனால், முதல் எலக்ட்ரிக் பைக்கான ஆர்வி400 -ஐ அறிமுகம் செய்வதற்கு 2 வருடங்களை ரிவோல்ட் எடுத்துக் கொண்டது.
பி.ஆர்.இசட், பிரீமியம், லிமிடெட் எடிசன் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.43 லட்சத்தில் இருந்து ரூ.1.55 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன. 3.24kWh லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 3 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செயல்பட துவங்கி வெறும் 3 வருடங்கள் மட்டுமே ஆன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஃப்ளோராமேக்ஸ் அதன் பயன்பாட்டில் உள்ள பைக்குகளை எலக்ட்ரிக்காக மாற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனால், வரும் மாதங்களில் மேலும் சில ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளை இந்த நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கிறோம். மற்ற நிறுவனங்களை போன்று, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்காமல், எலக்ட்ரிக் பைக்கை ஃப்ளோராமேக்ஸ் வாங்கியிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









