பின்னாடி 2 சேரை வாங்கி போட்டுட்டா ஃபேமிலியோட போகலாம்.. பாக்க 3சக்கரங்கள் கொண்ட டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ போலிருக்கு..

ரிலோக்ஸ் இவி (Rilox EV), இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது பிஜிலி ட்ரியோ (Bijli Trio) எனும் மூன்று சக்கரத்தில் இயங்கும் மின்சார வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. சரக்கு மற்றும் அதிக எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல உதவக் கூடிய வாகனமாகவே இதனை ரிலோக்ஸ் இவி தயார் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.35 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலையானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வாகனத்தை சரக்குகளை ஏற்றிச் செல்வது மட்டுமல்ல டெலிவரி சேவையை மையப்படுத்தியும் ரிலோக்ஸ் இவி தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதனை தனி நபர் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Rilox ev launches bijli trio

இதற்கேற்ப ஓட்டுநருக்கான இருக்கையை தாண்டி வேறு எந்த இருக்கை அமைப்பும் இந்த வாகனத்தில் வழங்கப்படவில்லை. நகர்புறங்களில் சரக்குகளை கையாள்வதில் இருக்கும் சிக்கல்களைக் களையும் பொருட்டே இந்த வாகனத்தை ரிலோக்ஸ் இவி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தில் சுமார் 500 கிலோ வரையிலான எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், ஓர் முழு சார்ஜில் இந்த வாகனத்தில் 100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக இந்த வாகனத்தில் 3 KW என்எம்சி (NMC) வகை பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 500 கிலோ எடையையும் இழுத்துச் செல்லும் விதமாக இந்த வாகனத்தில் 1200W மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற மோட்டாரே இதுவாகும். இத்துடன், இந்த வாகனத்தில் கூடுதல் சிறப்பம்சமாக 15 ட்யூப் சின் வேவ் கன்ட்ரோல்லர் மற்றும் எம்சிபி (40 Amps rated) ஆகியவை சிறந்த பேட்டரி பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், ரூமி பேக் கார்கோ கார்கோ பகுதி, நீடித்து உழைக்கும் திறன் கொண்ட அலுமினியம் அலாய் ஃப்ரேம் உள்ளிட்டவற்றை இந்த வாகனத்தின் உருவாக்கத்தில் ரிலோக்ஸ் இவி பயன்படுத்தி இருக்கின்றது. எனவே 500 கிலோ பாரத்தை நீண்ட நாட்களுக்கு சுமந்தாலும் இந்த வாகனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிகின்றது.

எனவே இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, தனி நபர்களிடத்தில் மட்டும் இன்றி பெரு நிறுவனங்களிடத்தில் இருந்தும் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

முக்கியமாக, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் டெலிவரி சேவையில் மின்சார வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த மாதிரியான நிறுவனங்களுக்கு ரிலோக்ஸ் இவி-யின் இந்த தயாரிப்பு பெரும் உதவியாகி இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், விற்பனையில் தனித்துவமான வரவேற்பை இது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே ரிலோக்ஸ் இவி போன்ற புதுமுக நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல், ஏற்கனவே முன்னணி பிராண்டுகளாக இருக்கும் நிறுவனங்கள் தங்களின் முன்னிலை இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2024, 19:26 [IST]
English summary
Rilox ev launches the bijli trio an affordable electric three wheeler for urban logistics
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+