இப்படியொரு ஸ்கூட்டரை வாங்கினால் ஏரியாவில் கெத்து காட்டலாம்! பெட்ரோல் தேவையில்லை... மொத்தமும் எலக்ட்ரிக்!!

ரிவர் (River), பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இண்டி (Indie) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரபலமானதாக உள்ளது. இதற்கு காரணம், அதன் அசத்தலான தோற்றம் ஆகும். ஆனால், அதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இண்டி ஸ்கூட்டரை ரிவர் நிறுவனம் மேம்படுத்தி அறிமுகம் உள்ளது. இதன்படி, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சில மாற்றங்களை செய்துள்ளனர். அவை என்னென்ன என்பதை பற்றியும், புதிய இண்டி ஸ்கூட்டரின் விலையை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நிறைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. அவ்வாறு கடந்த 2023ஆம் ஆண்டில் குதித்த நிறுவனங்களுள் ஒன்றுதான் ரிவர் ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இண்டி ஆகும்.

river indie electric scooter updated

அறிமுகத்தின்போதே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், இந்த விலை சில மாதங்கள் கழித்து ரூ.1.38 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட புதிய இண்டி ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.43 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான அப்டேட் என்னவென்றால், புதிய சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகும். செயின் டிரைவ் சிஸ்டத்துடன் இந்த கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ரிவர் இண்டி விற்பனை செய்யப்படும் பிரிவில் உள்ள மற்ற எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கியர்பாக்ஸ் வழங்கப்படுவது இல்லை. இது ஸ்கூட்டரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கக்கூடியது என ரிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

river indie electric scooter updated

இந்த செயின் டிரைவ் குறித்து ரிவர் நிறுவனத்தின் மெக்கானிக்கல் டிசைன் பிரிவின் அதிகாரி மஸேர் அலி பாய்க் மிர்ஸா கூறுகையில், சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள செயின் டிரைவ் சிஸ்டத்தினால் ஸ்கூட்டரை அசெம்பிள் செய்வது எளியதாகி உள்ளதால் பழுதுப்பார்ப்பு வேலைகளும் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இத்துடன், 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக 2 புதிய கலர் ஆப்ஷன்களையும் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. விண்டர் வெள்ளை மற்றும் ஸ்டோர்ம் கிரே என்பன அந்த 2 கலர் ஆப்ஷன்கள் ஆகும். ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கியமான சிறப்பம்சமே அதன் பருத்த உடலமைப்பாகும். ட்வின்-பீம் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பின் இருக்கை பயணிகள் கால் வைத்து கொள்வதற்கு தடிமனான கம்பிகள் உள்ளிட்டவை 2024 இண்டி ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

river indie electric scooter updated

ஓட்டுனர் கால் வைத்துக்கொள்ள தட்டையான மற்றும் அகலமான ஃப்ளோர்போர்டு, கிராப்ரெயில், கிராஷ் கார்ட்ஸ் மற்றும் தடிமனான டயர்கள் உடன் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தை மற்ற அனைத்து ஸ்கூட்டர்களில் இருந்தும் வேறுப்படுத்தி காண்பிக்கின்றன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 43 லிட்டர்களிலும், ஹேண்டில்பாருக்கு கீழே 12 லிட்டர்களிலும் என மொத்தமாக 55 லிட்டர் கொள்ளளவிற்கு பொருட்களை வைக்க இடவசதி உள்ளது.

ரிவர் இண்டி ஸ்கூட்டரில் 6.7 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் 4kWh பேட்டரி உடன் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 8.9 பிஎச்பி மற்றும் 26 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 120கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 90கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ரிவர் இண்டி போன்று தோற்றத்தில் எந்த ஸ்கூட்டரும் விற்பனையில் இல்லை. ஆனால், இண்டி ஸ்கூட்டரின் விலைதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.1.43 லட்சம் என்றால், ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.1.75 லட்சம் அளவில் வந்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 16:27 [IST]
English summary
River indie electric scooter updated price increased check all upgrades here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X