கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் வரும் ராயல் என்பீல்டு பைக்... இதை யாருமே கொஞ்சம் கூட எதிர்பாக்கல...
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு முறையாவது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பைக்கை வாங்கி விட வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. ஆனால் அனைவராலும் இந்த கனவை நிறைவேற்றி கொள்ள முடிவதில்லை. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விலை சற்று அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த நிலைமை மாறலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம், ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் குறைவான விலையில் பல்வேறு புத்தம் புதிய பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய 250 சிசி இன்ஜின் பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் தற்போதைய நிலையில் 'V' என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் பல்வேறு புத்தம் புதிய 250 சிசி இன்ஜின் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.
இதில், முதல் பைக் 2026ம் ஆண்டிலோ அல்லது 2027ம் ஆண்டிலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் நிறைய 250 சிசி இன்ஜின் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு, விலை குறைந்த மாற்று ஆப்ஷனாக இந்த 250 சிசி பைக்குகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி இன்ஜின் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, 250 சிசி இன்ஜின் மாடல்களின் விலை மிகவும் குறைவாக இருக்கலாம்.
250 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட புத்தம் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அனுமதி தற்போதுதான் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் ஒரு சில ஆண்டுகளில், ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து 250 சிசி இன்ஜின் பைக்குகளை நாம் எதிர்பார்க்கலாம்.
250 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகள் தவிர, புதிய ஹைப்ரிட் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மட்டுமல்லாது, வரும் ஆண்டுகளில் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் பைக்குகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய 250 சிசி இன்ஜின் பைக்குகளை அறிமுகம் செய்தால், அவை விற்பனையில் சாதிக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். 250 சிசி இன்ஜின் என்பதால், விலை குறைவாக இருக்கும் என்பதுதான் இதற்கு காரணம்.
250 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, ராயல் என்பீல்டு நிறுவனம் குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) பைக்கை களமிறக்கவுள்ளது. இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள இந்த புதிய பைக் வரும் ஜூலை 17ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.


Click it and Unblock the Notifications








