ஒரே ட்வின்ஸா பெத்து போடும் ராயல் என்பீல்டு.. 650இரட்டையர்களை போல 750இரட்டையர்களை விற்பனைக்கு கொண்டு வரபோகுதாம்
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் 650 இரட்டையர்கள் (650 Twins) பைக் மாடலைப் போல விரைவில் 750 இரட்டையர்கள் (750 Twins) பைக் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டின் புகழ்மிக்க தயாரிப்பாக 650 ட்வின் பைக்குகள் (இன்டர்செப்டர் 650 Interceptor 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 Continental GT 650) உள்ளன. இந்த தயாரிப்பிற்கு இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் அதிக திறனை வெளியேற்றும் மோட்டார்சைக்கிளாக இந்த இரட்டையர்கள் இருப்பதாலேயே இதற்கு நல்ல வரவேற்பு இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. அதுதவிர, சில அதிக பவரை வெளியேற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்த இரட்டையர்கள் மிகப் பெரிய போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
அந்தவகையில், உலக சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 (Triumph Speed Twin 900) பைக்கிற்கு கணிசமான அளவில் இந்த இரட்டையர்கள் பைக் மாடல்கள் போட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், என்ன இந்த டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டதாக இருக்கின்றது.
900 சிசி ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஸ்ஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 64.1 பிஎச்பி பவரையும், 80 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 பைக்கிற்கு போட்டியளிக்க 650 ட்வின் பைக்குகளின் திறன் போதாது.
இதன் காரணத்தினாலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது 750 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல்லான மோட்டாரைக் கொண்ட பைக்காக 650 ட்வின் பைக்குகள் உள்ளன.
இதைவிட அதிக பவர்ஃபுல்லான பைக்காகவே விரைவில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் 750 ட்வின் மோட்டார்சைக்கிள்கள் இருக்கப் போகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 650 பைக்குகளுக்கு மாற்றாக களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரையும், 55 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் புதிய 750 சிசி ட்வின் பைக்குகள் 650 ட்வின் பைக்குகளை தழுவியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிலேயே 650 ட்வின் பைக்குகளை 750 ட்வின் பைக்குகள் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நவீன கால சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டும் 99 சதவீதம் ஒத்துப்போகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரத்தில், பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதால் 750 ட்வின் முன்னிலையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எல்இடி ஹெட்லைட், அலாய் வீல் மற்றும் கட்டுமஸ்தான பாடி பேனல்களுடன் 750 ட்வின் பைக்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 650 ட்வின் பைக்குகளைப் போலவே எஞ்சின் விஷயத்தில் இந்த இரண்டும் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், உருவ தோற்றத்தில் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய மாற்றங்கள் இரண்டிற்கும் இடையில் இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் 650 ட்வின் பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது விற்பனையில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பையேப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே 750 ட்வின் பைக்கிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








