சகலகலா வித்தைக்காரனாயிட்டாங்க! ஹெல்மெட்டுகளுக்கான இன்டர்காம் டிவைஸை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு..

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இரண்டு சக்கர வாகன (Two Wheeler) உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield), வெறும் பைக்குகளை மட்டும் தயாரிச்சுட்டு இருக்குனு பார்த்தா அவங்க இப்போ கன்யூனிகேட் செய்யும் டிவைஸையும் தயார் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. நிறுவனம் தற்போது இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கான இன்டர்காம் கருவி (Mesh Communicator)-யையே அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கருவியை இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தங்களின் தலைக்கவசத்திலேயே நேரடியாக பொருத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

50எஸ் (50S) என்கிற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் அந்த கருவியை ராயல் என்பீல்டு, சேனா (SENA) எனும் நிறுவனத்துடன் இணைந்தே தயாரித்து இருக்கின்றது. சேனா ஓர் ஹெல்மெட் சார்ந்து தொலைத் தொடர்பு கருவிகளை தயார் செய்யும் நிறுவனம் ஆகும். இந்த பணிக்கு அது பெயர்போன நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது.

Royal enfield and sena jointly launched 50s mesh communicator

இந்த நிலையிலேயே சேனா மற்றும் ராயல் என்பீல்டு இந்த இரண்டு ஜாம்பவான் நிறுவனங்களும் இணைந்து ஹெல்மெட் இணைக்கும் வசதிக் கொண்ட இன்டர்காம் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றனர். இதனை இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் தேவை பூர்த்தி செய்யும் வகையிலேயே தாங்கள் தயார் செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்ந்து, அட்வான்ஸ்டான தொலை தொடர்பை வழங்கும் வகையிலும் அதை தயார் செய்திருப்பதாக இந்த கூட்டணி தெரிவித்திருக்கின்றது. அறிமுகமாக இந்த கருவிக்கு ரூ. 35,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கருவியை செல்போன் உடனும் இணைத்துக் கொள்ள முடியும். இதற்காக ப்ளூடூத் 5.0 அம்சம் 5எஸ் இன்டர்காம் கருவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

செல்போன் உடன் இணைக்கையில் இன்டர்காம் டிவைஸின் செட்டிங்க்ஸை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் செய்துக் கொள்ள முடியும். மிக முக்கியமாக ரைடர்களுக்கு உயர் வகை இணைப்பை வழங்கும் வகையிலேயே இந்த கருவியை ராயல் என்பீல்டு மற்றும் சேனா கூட்டணி தயார் செய்திருக்கின்றது.

காவலர்கள் பயன்படுத்தும் வாக்கி டாக்கியை போல இந்த கருவி பயன்படும். அதேவேளையில், மிகவும் துள்ளியமான உரையாடலை இது வழங்கும் என கூறப்படுகின்றது. வாகனத்தை ஓட்டிக் கொண்டே மற்ற ரைடர்களுடன் உரையாடிக் கொள்ள முடியும். குறிப்பாக தொடர்ந்து மற்ற ரைடர்களுடன் இணைப்பில் இருக்க முடியும்.

இந்த கருவியில் வரம்பற்ற இணைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. துள்ளியமான உரையாடலை வழங்குவதற்காக இந்த கருவியில் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காக ஹர்மேன் கர்டோன் ஸ்பீக்கர்களே இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

2 கிமீ முதல் 8 கிமீ தொலைவில் உள்ள ரைடர்களுடன் இதில் இணைத்து உரையாடிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், டூ-வீலர் ரைடர்கள் சக ரைடர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்துக் கொள்வதை இதன் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இந்த கருவியில் கூடுதல் அட்வான்ஸ்டு அம்சமாக வாய்ஸ் அசிஸ்டன்ட் வழங்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, நீடித்து உழைக்கும் விதமாக லித்தியம் பாலிமர் வகை பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை வெறும் 2.5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 12 மணி நேரம் வரை தொடர்ச்சியாக 50எஸ் இன்டர்காம் டிவைஸை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோரைக் கருத்தில் கொண்ட இந்த அளவு அதிக நேரம் உழைக்கும் பேட்டரி பேக் இந்த கருவியில் வழங்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு இந்த கருவியை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. லாங் டிராவலை குழுவாக மேற்கொள்ளும் பைக்கர்களுக்காகவே இந்த கருவியை சேனா உடன் இணைந்து ராயல் என்பீல்டு தயார் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 5:00 [IST]
English summary
Royal enfield and sena jointly launched 50s mesh communicator for riders
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+