இந்தியாவே காத்து கிடந்த ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்! இவ்ளோ கம்மியான விலையில் வரும்னு நெனச்சு கூட பாக்கல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு பியர் 650 (Royal Enfield Bear 650). இந்த பைக் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (நவம்பர் 5) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பைக் ஆகும்.

ஆனால் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை காட்டிலும், அதிக ஆஃப்ரோடு திறன்களை, ராயல் என்பீல்டு பியர் 650 பைக் கொண்டுள்ளது. அத்துடன் 'மாடர்ன்' ஆன ஒன்றாகவும் ராயல் என்பீல்டு நிறுவனம் பியர் 650 பைக்கை உருவாக்கியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Royal Enfield Bear 650

ராயல் என்பீல்டு பியர் 650 பைக்கின் முன் பகுதியில் லாங் டிராவல் யூஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பகுதியில் வழக்கமான ஸ்பிரிங்குகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதியில் சிங்கிள் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு பியர் 650 பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராயல் என்பீல்டு பியர் 650 பைக்கில் எம்ஆர்எஃப் (MRF) நிறுவனத்தின் நைலோரெக்ஸ் (Nylorex) டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Royal Enfield Bear 650 Side Design

செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ராயல் என்பீல்டு பியர் 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. அது 650 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவர் மற்றும் 57 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்பீல்டு பியர் 650 ஆகிய 2 பைக்குகளின் இன்ஜின்களும் 47 பிஹெச்பி பவரையே உருவாக்கும். ஆனால் டார்க் அவுட்புட் வெவ்வேறாக உள்ளது. அதாவது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை காட்டிலும், ராயல் என்பீல்டு பியர் 650 பைக்குடைய இன்ஜினின் டார்க் அவுட்புட் 5 என்எம் அதிகம் ஆகும்.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு பியர் 650 பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை பிராட்வாக் ஒயிட், டூ ஃபோர் நைன், கோல்டன் ஷேடோ, பெட்ரோல் க்ரீன் மற்றும் ஒயிட் ஹனி ஆகியவை ஆகும்.

இந்திய சந்தையில் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பியர் 650 பைக்கின் ஆரம்ப விலையை ராயல் என்பீல்டு நிறுவனம் 3.39 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 3.59 லட்ச ரூபாய் ஆகும். கலர் ஆப்ஷனை பொறுத்து விலை மாறுபடும். இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பியர் 650 பைக் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே விற்பனையில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் குறைவான ஆரம்ப விலையில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பியர் 650 பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒரு 650 சிசி பைக்கை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன்!

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 16:46 [IST]
English summary
Royal enfield bear 650 launched in india price engine features
மேலும்... #royal enfield #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+