ராயல் என்ஃபீல்டுக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி ஐடியா தோணுது? விலையை பார்த்த பின் வாங்கவும்!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புத்தம் புதிய பியர் 650 (Bear 650) பைக்கை வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக் விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்காக அதன் புது, புது 650சிசி பைக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பியர் 650 பைக் ஆனது அடிப்படையில் இண்டர்செப்டர் 650 பைக் ஆகும்.

ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்த பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், பியர் 650 பைக்கிற்கும், இண்டர்செப்டர் 650 பைக்கிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

bear 650 vs interceptor 650

டிசைன்: புதிய பியர் 650 பைக்கின் பெரும்பான்மையான டிசைன்கள் இண்டர்செப்டர் 650 பைக்கில் இருந்து பெறப்பட்டதுபோல் உள்ளது. இதன்படி, வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட் மற்றும் நிலக்கடலை போன்றதான வடிவத்தில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது. அதேபோல், இண்டர்செப்டர் 650 பைக்கில் வழங்கப்படுவதை போல் சிங்கிள் பீஸில் இருக்கை இந்த புதிய பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இண்டர்செப்டர் 650 பைக்கில் வழங்கப்படுவதை போல் ட்யூயல் எக்ஸாஸ்ட் செட்-அப் வழங்கப்படாமல், சிங்கிள் எக்ஸாஸ்ட் குழாய் கொடுக்கப்படுகிறது. இதனால், பக்காவான ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்காக புதிய பியர் 650 பைக் காட்சியளிக்கிறது. இதற்கேற்ப, இண்டர்செப்டர் 650 பைக்கில் வழங்குவதை காட்டிலும் கவர்ச்சிக்கரமான கலர் ஆப்ஷன்களை புதிய பியர் 650 பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

தொழிற்நுட்ப வசதிகள்: பியர் 650 பைக்கில் எல்இடி ஹெட்லைட்கள், தேவைக்கேற்ப ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் டிஎஃப்டி ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம், இண்டர்செப்டர் 650 பைக்கில் எல்சிடி திரை உடன் ட்யூயல்-பேட் அனலாக் செட்-அப் வழங்கப்படுகிறது. இண்டர்செப்டர் 650 பைக்கிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது என்றாலும், ஸ்விட்ச் செய்யக்கூடியதாக இல்லை.

bear 650 vs interceptor 650

என்ஜின்: இந்த இரு ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளிலும் ஒரே மாதிரியான 650சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால், புதிய பியர் 650 பைக்கில் 5 என்.எம் கூடுதலாக வழங்கக்கூடியதாக இந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் பாகங்கள்: புதிய பியர் 650 பைக்கில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், வழக்கமான ட்யூயல் ஷாக்குகள் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இண்டர்செப்டர் 650 பைக்கில் முன்பக்கத்தில் சாதாரணமான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் கேஸ் மூலமாக செயல்படக்கூடிய சுருள்களும் வழங்கப்படுகின்றன. மேலும், ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் என்பதை வெளிக்காட்டும் விதமாக ஸ்போக் சக்கரங்களை எம்.ஆர்.எஃப் நைலோரெக்ஸ் டயர்கள் உடன் கொண்டுள்ளது.

விலை: ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.3 லட்சத்து 21 ஆயிரமாக உள்ளது. இதனை காட்டிலும் பிரீமியம் தரத்திலான வசதிகள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் அதிக என்ஜின் ஆற்றலை பெற்றிருப்பதால், இண்டர்செப்டர் 650 பைக்கை காட்டிலும் அதிக விலையில் புதிய பியர் 650 பைக்கை எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், புது, புது 650சிசி பைக்குகளை கொண்டுவருவதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது. இதன் விளைவாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பியர் 650 பைக் எதிர்பார்ப்பதை போல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இந்த பைக்கிற்கு நிறைய கஸ்டமர்கள் கிடைப்பார்கள். ஏனெனில், வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 4, 2024, 8:00 [IST]
English summary
Royal enfield bear 650 vs interceptor 650 check full comparison here
மேலும்... #royal enfield #bike comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+