சென்னையில் உருவாகும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வெளிநாடுகளில் கூடும் கூட்டம்! ரிப்போர்ட் என்ன சொல்லுது?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி பைக் நிறுவனம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கும் மிகவும் பழமையான பைக் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ராயல் என்ஃபீல்டில் தொடர்ச்சியாக புது, புது பைக்குகள் அறிமுகம் செய்யப்படுவது ஆகும். ஆனால், நடந்து முடிந்த கடந்த நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது. இந்த வரிசையில் சமீபத்தில் கூட கோன் கிளாசிக் 350 பைக்கை அறிமுகம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரேயொரு இருக்கை பாப்பர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிளாக கோன் கிளாசிக் 350 அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்வாறான புதிய அறிமுகங்களின் மூலமாக, கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 82 ஆயிரத்து 257 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. இது 2023 நவம்பர் மாதத்தை காட்டிலும் 2 ஆயிரம் பைக்குகள் அதிகம் என்றாலும், ராயல் என்ஃபீல்டின் உள்நாட்டு விற்பனை குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்த 82 ஆயிரத்து 257 பைக்குகளில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 72 ஆயிரத்து 236 ஆகும்.
மீதி 10 ஆயிரத்து 21 பைக்குகள் கடந்த மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். ஆனால், 2023 நவம்பர் மாதத்தில் 75 ஆயிரத்து 137 பைக்குகளை உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரத்து 901 யூனிட்கள் குறைந்துள்ளது. மறுப்பக்கம், ராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதி டபுள் மடங்காக அதிகரித்துள்ளது.

2023 நவம்பரில் வெறும் 5 ஆயிரத்து 114 பைக்குகளை மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரம் பைக்குகளை கடந்துள்ளது. மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை 350சிசி பைக்குகள் மற்றும் 350சிசி-ஐ விட பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட பைக்குகள் என இரண்டாக பிரிக்கலாம்.
கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 71 ஆயிரத்து 261 350சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. இதில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளும் அடங்குகின்றன. 2023 நவம்பரில் இதனை காட்டிலும் 3 ஆயிரத்து 14 பைக்குகள் அதிகமாக 74 ஆயிரத்து 275 350சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350 என பல்வேறு விதமான 350சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்கிறது.

350சிசி-ஐ விட பவர்ஃபுல்லான ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பொறுத்தவரையில், இவற்றில் ஹிமாலயன் 411, ஹிமாலயன் 450, ஸ்க்ராம் 411 உள்ளிட்டவற்றுடன் ராயல் என்ஃபீல்டின் 650சிசி பைக்குகளும் அடங்குகின்றன. இவை மொத்தமாக கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 996 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 350சிசி பைக்குகள் அளவிற்கு இல்லையென்றாலும், 350சிசி+ பைக்குகள் தான் தற்போதைக்கு ராயல் என்ஃபீல்டின் நம்பிக்கையாக மாறி வருகின்றன.
ஏனெனில், 2023 நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 976 350சிசி+ பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் வரையில் 8 மாத காலத்தில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 611 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் இதே 8 மாத காலக்கட்டத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 672 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், 350சிசி பைக்குகளின் விற்பனை குறைந்திருப்பதாகும். 350சிசி+ பைக்குகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே, ராயல் என்ஃபீல்டின் வெளிநாட்டு ஏற்றுமதி டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு விற்பனை கணிசமாக குறைந்திருப்பது ராயல் என்ஃபீல்டுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









