சென்னையில் தொழிற்சாலை வைத்திருந்தால் ஜொலிக்கலாம் போலயே... ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு டிமாண்ட் அதிகமாகுது!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ராயல் என்ஃபீல்டிற்கு இந்தியாவை தாண்டியும் பல வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்த அளவிற்கு, உலகம் முழுவதும் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி உள்ள இந்த பைக் நிறுவனத்துக்கு தாய்லாந்திலும் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாம் இந்த தொகுப்பில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமே பார்க்கவுள்ளோம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதத்தில் மொத்தமாக 73,141 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இவற்றில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என இரண்டும் அடங்குகின்றன. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 77,109 பைக்குகளை ஒட்டுமொத்தமாக ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை ஆனது 5% குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், அதாவது 2024 ஏப்ரல் - ஜூன் வரையில் மொத்தம் 2 லட்சத்து 26,907 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் இதே 3 மாதங்களில் 799 பைக்குகள் அதிகமாக 2 லட்சத்து 27,706 பைக்குகளை விற்பனை செய்திருந்தது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்த 73,141 பைக்குகளில் 66,117 பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். ஆனால், 2023 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 2% அதிகமாக 67,495 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

கடந்த 3 மாதங்களில் மொத்தம் 2 லட்சத்து 4,686 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் 2 லட்சத்து 7,171 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, இந்த 3 மாதங்களில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை ஆனது 1% சரிந்துள்ளது.
மறுப்பக்கம், இந்தியாவில் இருந்து 7,024 பைக்குகளை கடந்த ஜூன் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 9,614 பைக்குகளை இந்தியாவில் உற்பத்தி செய்து இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி ஆனது 27% குறைந்துள்ளது.

2024 ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் மொத்தம் 22,221 பைக்குகளை வெளிநாடுகளுக்கு ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் 20,535 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில், ராயல் என்ஃபீல்டின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது 8% அதிகரித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் தற்சமயம் ஹண்டர் 350, புல்லட் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஸ்க்ராம் 411, ஹிமாலயன், ஹிமாலயன் 450, இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650, ஷூட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 உள்ளிட்ட பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன் விரைவில் புதியதாக கொரில்லா 450 பைக் இணைய உள்ளது.
| Royal Enfield | June | YTD | ||||
| 2024 | 2023 | Growth | 2024'25 | 2023'24 | Growth | |
| Domestic | 66,117 | 67,495 | -2% | 2,04,686 | 2,07,171 | -1% |
| Exports | 7,024 | 9,614 | -27% | 22,221 | 20,535 | 8% |
| Total | 73,141 | 77,109 | -5% | 2,26,907 | 2,27,706 | 0% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பாக, கடந்த சில வருடங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடைந்திருக்கும் உயரமானது மிக பெரியது ஆகும். இதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகப்படுத்துவது என்கிற கொள்கையுடன் சமீப ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகிறது. இதனால், இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு மாதத்திலும் 1 லட்சம் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









