இவ்வளவு கம்மி விலைக்கு புல்லட் பைக்கா? அதுவும் பழைய டிசைன்லயே இருக்குதே!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிஷனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ 1.74 லட்சம் என்ற விலையில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் விண்டேஜ் டிசைன் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட கோல்ட் பின்ஸ்ரைப்புகள் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் பைக்காக இருக்கிறது. இந்த பைக்கில் பல்வேறு அப்டேட்களை செய்து அவ்வப்போது அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் தற்போது தனது புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் என்ற எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புல்லட் 350 பெட்டாலியன் பிளாக் எடிசன் பைக் ரூ 1,74,730 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் சில முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள முக்கியமாக பழைய பைக் போன்ற தோற்றத்தில் இந்த பைக்கில் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. பைக்கின் இன்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை. ரெட்ரோ லுக்கில் இந்த பைக்கின் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
பெட்டாலியன் பிளாக் எடிசன் பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை பழைய டிசைன் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக பழைய பைக்கில் உள்ள ரெட்ரோ அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கில் இடம் பிடித்துள்ளது. முக்கியமாக இதில் பென்ச் சீட் பழைய பைக்கில் இருப்பது போலவே இதிலும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்கில் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட கோல்ட் பின் ஸ்டிரைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த பைக்கில் 3d பேட்ஜ்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் பக்கவாட்டு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் குரோம் ரிம், ஸ்போக் வீல்கள், கருப்பு நிற கண்ணாடி பழைய மாடல் நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஜே என்ற பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது.
349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்கம் 153மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் சேனல் ஐபிஎஸ் உடன் விற்பனைக்கு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த புல்லட் 350 பெட்டாலியன் வேரியண்ட் பைக்கை மிலிட்ரி வேரியண்ட் பைக்குக்கு சற்று ஒரு படி மேலே பொசிஷன் செய்துள்ளது. இதில் பிளாக் கோல்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் ஆகிய இரண்டு விதமான வேரியன்டுகள் உள்ளன. தற்போது பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இந்த பைக் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் என்றாலே மார்க்கெட்டில் நல்ல பெயர் பெற்றவைகளாக இருக்கின்றன. இந்த பைக்குகளை வாங்க ஏகப்பட்ட மக்கள் விரும்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பைக்கின் புல்லட் 350 பைக்கில் புதிதாக ஒரு எடிசன் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. நமக்கு தெளிவாக தெரிகிறது.
பண்டிகை காலம் நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களை எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதை மனதில் வைத்து தான் இப்படியானவைகளை எல்லாம் தற்போது களமிறக்கி விடுகின்றன. இந்த பைக் நிச்சயம் விற்பனையில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த பைக்கை ஏராளமான மக்கள் விரும்பி வாங்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிமுகத்தின் மூலம் தனது புல்லட் 350 பைக்கின் ரசிகர்களை அந்நிறுவனம் குஷி படுத்தியுள்ளது. குறிப்பாக பழைய மாடல் பைக்கில் விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









