புல்லட் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப நாளா இந்த அப்டேட்டுக்கு தான் வெயிட் பண்ணாங்க! ராயல் என்ஃபீல்டில் செம அறிவிப்ப

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பைக்கில் ஏற்கனவே உள்ள நிறங்கள் போக இரண்டு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மிலிட்டரி சில்வர் பிளாக் நிறத்தில் சில்வர் பைன்ஸ்ரைப் கொண்ட நிறமும், மிலிட்டரி சில்வர் ரெட் நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு என நீங்கள் நினைத்தாலே உங்கள் கண் முன் தோன்றும் முதல் பைக் புல்லட் தான். இது நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருக்கும் பைக்காகும். ஒரு காலத்தில் இந்த புல்லட் பைக்கை ரோட்டில் பார்த்தால் அனைவரது கவனமும் இந்த புல்லட் பைக்கை நோக்கியே இருக்கும். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த பைக் அதன் காரணமாகவே இன்றளவும் சிறப்பான விற்பனையில் இருக்கிறது.

royal enfield bullet 350 new colours

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பைக்கிற்க்கு இந்தியாவில் இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மிலிட்டரி சில்வர் பிளாக் நிறத்தில் சில்வர் பின்ஸ்டிரைப் கொண்ட கலர் ஆப்ஷனும் மிலிட்டரி சில்வர் ரெட் ஷேட் கலர் ஆப்ஷனும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மிலிட்டரி பிளாக் மிலிட்டரி ரெட், ஸ்டாண்டர்டு பிளாக், ஸ்டாண்டர்ட் மெரூன், டூயல் டோன் பிளாக் கோல்டு ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த பைக் தற்போது ரூபாய் 1.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த புல்லட் 350 பைக் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக கையால் பெயிண்ட் செய்யப்பட்ட பின் ஸ்டிரைப்ஸ் கொண்டு இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இது பார்க்க அட்டகாசமான லுக்கில் இருக்கிறது.

royal enfield bullet 350 new colours

இந்த இரண்டு புதிய பெயிண்ட் ஸ்கீமிலும் டேங்க் பகுதியில் தான் இந்த பின்ஸ்டிரைப் வழங்கப்படுகின்றன. தற்போது புதிதாக கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நான்கு எடிசன்களாக இந்த பைக் தற்போது விற்பனையில் இருக்கிறது. புல்லட் மிலிட்டரி, புல்லட் மிலிட்டரி சில்வர், புல்லட் ஸ்டாண்டர்ட், புல்லட் பிளாக் கோல்ட், ஆகிய ஆப்ஷன்களுடன் கூடுதலாக பிரீமியம் பினிஷ் செய்யப்பட்ட பின்ஸ்டிரைப் ஆப்ஷனும் சேருகிறது.

இந்த புதிய கலர் ஆப்ஷன் கொண்ட பைக்கில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. முக்கியமான சிங்கிள் சேனல் ஐபிஎஸ் மற்றும் பின்பக்க வீலில் டிரம்பிரேக் சிஸ்டம் இருக்கிறது. மற்ற வேரியன்ட் மற்றும் கலர்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போதும் டாப் வேரியன்டாக புல்லட் பிளாக் கோல்டு கலர் தான் இருக்கிறது. இதில் டேங்கில் கிளாசிக் பிளாக் ஃபினிஷ் உடன் காப்பர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் தங்க நிற 3d பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளது.

royal enfield bullet 350 new colours

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை பழைய பைக்கில் இருந்து எந்த வித மாற்றங்களும் இல்லாமல் மற்ற கலர் ஆப்ஷன் பைக்கில் உள்ள அதே இஞ்சின் தான் பொருத்தப்படுகிறது. 349 சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 20 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இஞ்சின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு பக்கம் கொண்ட ஷாக்அப்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கம்போல புல்லட் பைக்கிற்க்கு வரவேற்பு இருப்பது போல் இந்த புதிய கலர்ஸ்கீமிற்க்கும் நல்ல வரவேற்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீண்ட நாட்களாக புல்லட் பைக்கில் புதிய கலர் ஸ்கீம் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆப்ஷனை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு என்று மிகப்பெரிய பெயர் இருக்கிறது. அந்த பெயர் வருவதற்க்கு முக்கியமான காரணமாக இருந்தது இந்த புல்லட் 350 பைக் தான். சாலையில் இந்த பைக் சென்றாலே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பான அம்சங்கள் கொண்ட பைக்காக இந்த பைக் இருக்கிறது. இதில் இரண்டு புதிய கலர் ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 24, 2024, 17:38 [IST]
English summary
Royal enfield bullet 350 new colours launch price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X