அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்கை வெளியிடும் தேதியை அறிவித்தது ராயல் என்ஃபீல்டு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 பைக்கை அப்டேட் செய்து இந்திய மார்க்கெட்டில் வெளியிடப் போகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இந்த புதிய பைக் இந்திய மார்க்கெட்டுக்காக அறிமுகப்படுத்த போகிறது. இந்த பைக்கில் பல்வேறு விதமான அப்டேட்டுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியாக இந்த வாகனத்தில் என்னென்ன அப்டேட்கள் வரப்போகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக்350 பைக்கை அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி தனது புதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக்350 பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. புதிய பைக்கில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் வரப்போகிறது என்ற அதிகாரப்பூர்வமான தகவல்களை இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 பைக்கின் வடிவமைப்பை தற்போது உள்ள டிசைன் போலவே வடிவமைத்து அதில் சில கூடுதல் அம்சங்களை பொருத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் காஸ்மெட்டிக் தொடர்பான அதிகமான மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் ரீதியாக பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்த பைக்கில் புதிதாக எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோக பைலட் லைட் மற்றும் டெயில் லைட் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது உள்ள கிளாசிக் 350 பைக்குகளை போல புதிதாக வரவுள்ள கிளாசிக் 350 பைக்கிலும் ஏகப்பட்ட வேரியண்ட்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் ஹார்டுவேர் செட்டப்புகளில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்குகளில் ஆறு விதமான வேரியண்ட் இருக்கின்றன. இதில் கலர் மற்றும் ஏபிஎஸ் செட்டப் பிரேக்கிங் ஹார்டுவேர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதே போல தான் புதிய அப்டேட்டிலும் வேரியண்ட் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்கள் அறிமுக தேதியின் போது தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
தற்போது உள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் ஏற்கனவே உள்ள பைக்கில் உள்ள அதே ஜே சீரிஸ் 349 சிசி ஏர் அல்லது ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 20.2 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மேலும் இந்த பைக்கில் முன்பக்கம் டெலஸ்கோபிக் போர்க்கும் பின்பக்கம் டூயல் ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் ஆப்ஷனலாக டிரம் அல்லது டிஸ்க் பிரேக் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வீல்களை பொறுத்தவரை பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் சில அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாக போவதால் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். நாம் எதிர்பார்க்கும் படி ரூ2 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியண்டும், ரூ2.30 லட்சம் என்ற விலையில் டாப் வேரியண்டும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிமுக தேதியின் போது தான் தெரியவரும்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 பைக்கை அப்டேட் செய்வது அதன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதனால் இந்த பைக்கின் விற்பனை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து அவர்களுக்கு பிடித்தது போல் இந்த பைக் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக் மூலம் தனிக்காட்டு ராஜாவாக மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தது. தற்போது இந்த பைக்குக்கு போட்டியாக போட்டி நிறுவனங்கள் பல்வேறு பைக்குகளை களம் இறக்குவதால் அதை சமாளிக்கும் வகையில் இந்த பைக்கை நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இந்த பைக்கின் அப்டேட் வந்த பிறகு நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டி உருவாகும்.


Click it and Unblock the Notifications









