நம்பவே முடியல! ராயல் என்பீல்டு பைக் இவ்ளோ மைலேஜ் தருதா! வாங்கறதுக்கு ஷோரூம்ல எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29,476 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 26,781 ஆக மட்டுமே இருந்தது. இது 10.06 சதவீத வளர்ச்சி ஆகும். இது சிறப்பான வளர்ச்சி என்பதுடன், நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியலில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350, 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சரியான விலை நிர்ணயம் இதில் முக்கியமான காரணமாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.93 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.25 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 349 சிசி இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 20.3 ஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் முன்பை காட்டிலும் தற்போது அதிர்வுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே 349 சிசி இன்ஜின்தான், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான பைக்கான மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் என 2 வகையான மாடல்கள் வழங்கப்படுகின்றன. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ரைடர் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு இந்த வசதி உதவி செய்கிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ-ஆக உள்ளது.
இதன் மூலம் பல வகையான மேற்பரப்புகளிலும் பைக்கை சௌகரியமாக ஓட்ட முடியும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 13 லிட்டர்களாக உள்ளது. எனவே தொலை தூர பயணங்களின்போது பெட்ரோல் நிரப்புவதற்காக அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு செல்ல வேண்டியதில்லை. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 36.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ராயல் என்பீல்டு கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda Hness CB350) மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 (Benelli Imperiale 400) உள்ளிட்ட பைக்குகளுக்கு, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








