லிட்டருக்கு 42 கிமீ மைலேஜ் தரும் ராயல் என்பீல்டு பைக்கா! விலையும் இவ்ளோதானா! கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கே!

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக இருந்து வரும் பைக் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு (Royal Enfield). இந்த நிறுவனத்தின் மாடல் வாரியான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், கிளாசிக் 350 (Classic 350) பைக் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 26,134 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 28,013 ஆக உயர்ந்துள்ளது. இது 7.1 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.93 லட்ச ரூபாயாக உள்ளது.

Royal Enfield Classic 350

அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 349.34 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.21 பிஎஸ் பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக் ஒரு லிட்டருக்கு 41.55 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பால் சான்று வழங்கப்பட்ட மைலேஜ் ஆகும். எனினும் நடைமுறை பயன்பாட்டில், இந்த மைலேஜ் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Royal Enfield Classic 350 Side Design

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளவு 13 லிட்டர்கள் ஆகும். இதன் மூலம் அடிக்கடி பெட்ரோல் நிரப்பியாக வேண்டிய கட்டாயம் இல்லாமல், தொலை தூர பயணங்களை 'ரிலாக்ஸ்' ஆக மேற்கொள்ள முடியும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆக உள்ளது. இதன் மூலம் அனைத்து விதமான சாலைகளிலும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ஓட்ட முடியும். இந்த பைக்கானது, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் மூலம் நீங்கள் பைக்கை நம்பிக்கையுடன் ஓட்ட முடியும். இதுதவிர ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) உள்ளிட்ட வசதிகளும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொடுக்கப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) உள்ளிட்ட பைக்குகள் உடன், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில், ராயல் என்பீல்டு நிறுவனம் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதற்கு கிளாசிக் 350 மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 23:45 [IST]
English summary
Royal enfield classic 350 sales report january 2024 all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+