காத்து வாங்கும் ராயல் என்பீல்டு ஷோரூம்கள்... இந்த பைக்கை வாங்கவே ஆள் இல்லயா! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இந்த பைக்கின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 23,779 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் அதிகமாக விற்பனையான டாப்-10 பைக்குகளின் பட்டியலில், கிளாசிக் 350 பைக் 9வது இடத்தை பிடித்துள்ளது.

எனினும் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை 9.76 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 26,350 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 23,779 ஆக சரிவடைந்துள்ளது.

Royal Enfield Classic 350

இது 9.76 சதவீத வீழ்ச்சி ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.3 ஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த இன்ஜின் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தாது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக உள்ளது.

Royal Enfield Classic 350 Side Design

அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் உள்பட பல்வேறு வசதிகளையும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 270 மிமீ ரோட்டரும் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆக உள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.93 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய மாடல்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350), ஜாவா 350 (Jawa 350) மற்றும் ஜாவா 42 (Jawa 42) உள்ளிட்ட பைக்குகள் உடன், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்கின் புதிய மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மீண்டும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 23:16 [IST]
English summary
Royal enfield classic 350 sales report may 2024
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+