உலக மேடையில் வைத்து காட்சிப்படுத்தப்பட்ட சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு! கண்ணுபடுற அளவுக்கு ரெடி பண்ணிருக்காங்க

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் கிளாசிக் 350 (Classic 350) ஒன்றாகும். இதன் 650 சிசி வெர்ஷனையே அந்நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இத்தாலி நாட்டில் உள்ள மிலன்-இல் 2024 ஆம் ஆண்டிற்கான இஐசிஎம்ஏ (EICMA 2024) வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி வாயிலாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 650 (Classic 650)-யை வெளியீடு செய்திருக்கின்றது. முன்னதாக அந்நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடல்கள் சிலவற்றை அறிமுகம் செய்தது.

இவற்றைத் தொடர்ந்தே இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்ப்பாக இருந்து வரும் கிளாசிக் 650-யையும் அது வெளியீடு செய்திருக்கின்றது. இது பார்வையாளர்களின் கவனத்தை கவரும் வகையில் இருந்தது. ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளியா சி6 (Flying Flea C6), ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 (Flying Flea S6) மற்றும் ஹிமாலயன் எலெக்ட்ரிக் 2.0 (Himalayan Electric 2.0) ஆகிய மின்சார பைக் மாடல்களையே அங்கு காட்சிப்படுத்தியது.

Royal enfield classic 650 launches at eicma 2024

இந்த பைக் மாடல்களை மட்டுமில்லைங்க இன்னும் சில 650 சிசி பைக் மாடல்களையும் அது இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியின் வாயிலாக காட்சிப்படுத்தி இருக்கின்றது. மேலும், ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புகழ்பெற்ற சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷாட்கன் 650 ஆகிய பைக்குகளில் வழங்கியிருக்கும் அம்சங்களையே இந்த புதிய கிளாசிக் 650 பைக்கிலும் வழங்கி இருக்கின்றது.

ஆகையால், மாடர்ன் அம்சங்கள் நிறைந்த மோட்டார்சைக்கிளாக கிளாசிக் 650 இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், இதன் லுக் ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும். எனவே, கிளாசிக் 350-யை போலவே கிளாசிக் 650-யும் மாடர்ன் அம்சங்கள் நிறைந்த ரெட்ரோ ரக மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது.

Royal enfield classic 650 launches

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் அட்டகாசமான நான்கு நிற தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. டீல் (Teal), வல்லும் ரெட் (Vallum Red), ப்ரன்டிங்த்ரோப் ப்ளூ (Bruntingthorpe Blue) மற்றும் பிளாக் குரோம் (Black Chrome) ஆகியவையே அவை ஆகும்.

ஆனால், இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகின்றது. ஆகையால், ஒரு சில நாட்களிலேயே கிளாசிக் 650 பைக்கின் விலைகளை ராயல் என்பீல்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பம்சங்களை மற்ற 650 பைக்குகளிடம் இருந்து இந்த பைக் பெற்றிருந்தாலும் தோற்றத்தைப் பொருத்தவரை இது அப்படியே கிளாசிக் 350 பைக்கையே பிரதிபலிக்கின்றது.

மிக முக்கியமாக தண்ணீர் துளி போன்ற அமைப்புடைய ஃப்யூவல் டேங்க், வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், வட்ட வடிவ இன்டிகேட்டர் லைட்டுகள் மற்றும் வட்ட வடிவ பின் பக்க லைட் என அனைத்திலும் கிளாசிக் 350-யையே கிளாசிக் 650 பிரதிபலிக்கின்றது.

அதேவேளையில், இது ஓர் 650 சிசி எஞ்சின் கொண்ட வாகனம் என்பதை பிரதிபலிக்கும் விதமாக சற்றே பெரிய உருவம் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக எஞ்சின் பகுதி மிகப் பெரியதாக உள்ளது. இத்துடன், இரண்டு எக்சாஸ்ட் குழாய்கள், பெரிய டிஸ்க் பிரேக்குகள், 19-18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவையே இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது.

இதுதவிர, இந்த பைக்குகளுக்கு என்றே தயார் செய்யப்பட்ட 43 மிமீ ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே இநத் பைக்கில் பயன்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், கிளாசிக் 350 பைக்கைக் காட்டிலும் கிளாசிக் 650 மிகவும் அட்டகாசமான தயாரிப்பாகக் காட்சியளிக்கும் என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மோட்டார்சைக்கிளே ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஆகும். இதைப் போலவே கிளாசிக் 650க்கும் வரவேற்பு மிகப் பெரிய அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கை இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ராயல் என்பீல்டு விற்பனைக்கு வழங்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 18:54 [IST]
English summary
Royal enfield classic 650 launches at eicma 2024 with modern retro design
மேலும்... #royal enfield #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+