இப்படி தள்ளி போட்டுட்டே போனா எப்படி?.. ராயல் என்பீல்டை எல்லாரும் திட்டிதீர்க்க போறாங்க!

இந்தியர்கள் பலரின் பிரியமான டூ-வீலர் பிராண்டாக ராயல் என்பீல்டு (Royal Enfield) இருக்கின்றது. இந்த நிறுவனத்திடம் அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் (Electric Bike) இருக்கின்றன. இந்த எதிர்பார்ப்பு இன்னும் சில வருடங்களுக்கு எதிர்பார்ப்பாக மட்டுமே இருக்கும் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் வெளியாகிய தகவல்களின்படி, ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகி உள்ள தகவல்களோ இன்னும் சில வருடங்கள் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளும் என கூறுகின்றன.

Royal enfield electric motorcycle

இதனால் மிகுந்த மன வேதனைக்கு அதன் பிரியர்கள் மூழ்கும் நிலை உருவாகி இருக்கின்றது. ராயல் என்பீல்டு 2027 ஆம் ஆண்டிலேயே அதன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்யும் என தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இன்னும் மூன்று ஆண்டுகள் வரை ராயல் என்பீல்டு பைக் பிரியர்கள் அதன் எலெக்ட்ரிக் பைக்கை வாங்க காத்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக கிளாசிக் 350 இருக்கின்றது. இதையே அந்நிறுவனம் முதலில் மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் ராயல் என்பீல்டு முற்று புள்ளியை வைத்துவிட்டது. இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், நாட்டின் எலெக்ட்ரிக் பைக் பிரிவை அலங்கரிக்கும் நோக்கில் மிக தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில்கூட அந்நிறுவனம் ஓர் சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கிற்கு பேடண்ட் பதிவை இந்தியாவில் செய்திருந்தது. இவ்வாறு ஓலா எலெக்ட்ரிக் பைக் பிரிவில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் சூழலில், ராயல் என்பீல்டு இந்த பிரிவு எங்களுக்கு இப்போதைக்கு முக்கியம் இல்லை என்பதை போல மெத்தனமாக செயல்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டு இருப்பது உள்ளது. அதேவேளையில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஐசிஇ டூ-வீலர் பிரிவில் புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் அதி தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், அது வெகு விரைவில் ஹிமாலயன் பைக்கின் நேக்கட் வெர்ஷனான கொரில்லா 450 மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த பைக்கே சமீபத்தில் சென்னை சாலையில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டிருந்தபோது கேமிராவின் கண்களில் சிக்கியது. இதுதவிர, 650 ட்வின் (இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி) பைக் மாடல்களை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக அது விரைவில் 750 ட்வின் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு பிளான்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், 450 சிசி மற்றும் 350 சிசி பிரிவுகளையும் விரிவாக்கம் செய்யும் பணியில் ராயல் என்பீல்டு மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்களில் இந்த பிரிவுகளை அலங்கரிக்கும் விதமாக அசத்தலான பைக் மாடல்களை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில புதுமுக வாகனங்களுக்கான பெயர்களுக்கு அந்நிறுவனம் பேடண்ட் உரிமத்தை நாட்டில் பெற்றிருப்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இ-பைக்குகளின் சந்தை இப்போதே மெல்ல வளர தொடங்கி இருக்கின்றது. விரைவில் இந்த பிரிவும் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 5:00 [IST]
English summary
Royal enfield electric motorcycle launch will happen in 2027
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+