ராயல் என்பீல்டு இந்த இ-பைக்கதான் தயாரிக்க போகுது! படத்தை பார்த்த நிறைய பேரு இப்பவே வெயிட் பண்ண தொடங்கிட்டாங்க!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலை பல வாகன உற்பத்தியாளர்களை மின்சார டூ-வீலர் உற்பத்தியை நோக்கி நகர செய்திருக்கின்றது. அந்தவகையில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தையும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியை நோக்கி நகர்த்தி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் ஓர் தகவலே தற்போது வெளியாகி உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்க இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என கூறி ஓர் பைக்கின் வரைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, "இதுவே ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் மின்சார பைக் என்றும், இது தற்போது உற்பத்திக்கு தயாராக இருப்பதாகவும்" தெரிவிக்கின்றன. மேலும், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியீடு செய்யும் என்றும் 2026 ஆம் ஆண்டின் முடிவிற்குள் அதை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என்றும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Royal enfield electric motorcycle

தற்போது வெளியாகி இருக்கின் பைக்கின் வரைபடத்தின் வாயிலாக, நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் நவீன ரெட்ரோ ரக பைக்காக உருவாக்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த வசீகர தோற்றத்தையே அதுக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடலான கிளாசிக் இடமிருந்து சில கூறுகளை இந்த வாகனம் உள் வாங்கி இரு்கின்றது.

அதேவேளையில், எலக்ட்ரிக் பைக்கின் முன்பக்கம் 1920களில் விற்பனையில் இருந்த சில மோட்டார்சைக்கிள்களை நினைவூட்டும் வகையில் உள்ளது. கர்டர் வகை ஃபோர்க் (Girder Fork)-குகளைக் கொண்டுள்ளது. தொடர்ந்து, ஒற்றை இருக்கை அமைப்பைக் கொண்ட வாகனமாகவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்திருக்கின்றது.

எனவே சிங்கிள் பசங்க மத்தியில் இந்த பைக்கிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த பைக்கை இரண்டு இருக்கைகள் கொண்டதாகவும் வாங்கிக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் அதிகவர்ச்சியானதக உள்ளது. குறிப்பாக, முன் பக்கத்தைப் போலவே பின் பக்கம் கண்களைக் கவரக் கூடியதாக இருக்கின்றது.

மட்கார்ட், இருக்கை மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மிகப் பெரிய பேட்டரி பேக்கை ராயல் என்பீல்டு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு விபரமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பைக்கின் வரைபடத்தை வைத்து பார்க்கையில் டம்மியான ஃப்யூவல் டேங்கிற்கு கீழே மிகப் பெரிய கம்பார்ட்மென்ட் உள்ளது.

அங்கேயே இ-பைக்கின் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இ-பைக்கின் ஸ்விங்கார்ம் உருவாக்கத்தில் அலுமினியமே பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான மின்சார மோட்டார் பயன்படுத்த இருக்கின்றது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இ-பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை. பைக்கின் அறிமுகத்தை முன்னிட்டு விரைவில் இந்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெல்ட் டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாகவே இந்த பைக் இயக்கம் இருக்கும் என தெரிகின்றது.

செயினுக்கு பதிலாக பெல்ட் இதில் பயன்படுத்தப்பட இருப்பது அதன் விலையைக் கணிசமாக குறைக்க உதவியாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் 'எலக்ட்ரிக்01' என்கிற பெயரில் குறிப்பிடுவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்படவில்லை.

ராயல் என்ஃபீல்டு இந்த புதிய மாடலுக்கு பழைய பிராண்ட் பெயரை அளித்து அதற்கு புத்துயிர் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், என்ன பெயர் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த ஸ்டைலிங்கும் புதியதாக உள்ளது.

ஆனால், அனைத்து ஸ்டைலிங்கும் அமைப்பும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாரம்பரியத்துடன் தொடர்பைப் பேணும் வகையிலேயே இருக்கின்றன. குறிப்பாக இந்த பைக் விற்பனைக்கு வரும்போது நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றைத் தாங்கிய ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேவிகேஷன், டிராக்கிங் மற்றும் இணைப்பு அம்சம் என ஏகப்பட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளைக் காட்டிலும் மிகவும் அழகான மற்றும் நவீன அம்சங்களைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் பைக் இருக்கும் என கூறப்படுகின்றது. எனவே போட்டி நிறுவனங்களின் மின்சார எலெக்ட்ரிக் பைக்கிற்கு ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் பைக் மிகப் பெரிய போட்டியை வழங்கக் கூடியதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் இ-பைக்கின் படம் கசிந்துள்ளது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டார்க், ரிவோல்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 18:28 [IST]
English summary
Royal enfield electric motorcycle picture revealed here is more details
மேலும்... #royal enfield #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+