ராயல் என்ஃபீல்டு பார்த்து, பார்த்து உருவாக்கி இருக்கும் புது பைக் ஜாக்கெட்!! என்ன நடந்தாலும் கிழியாது!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் எக்ஸ்புளோரர் வி4 ரைடிங் ஜாக்கெட் (Explorer V4 Riding Jacket) வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. மற்றப்படி, ஜாக்கெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய ரைடிங் ஜாக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, பைக்குகளுக்கான ஆக்ஸஸரீகள் மற்றும் ரைடர்களுக்கான ரைடிங் கியரையும் கூட உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதில் ரைடர்களுக்கான ரைடிங் கியரில் பிரத்யேகமான ஹெல்மெட்டில் இருந்து ஷூ வரையில் பைக் ஓட்டும்போது ரைடருக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்குகின்றன.

இதற்காகவே, 2014ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் ஆடை பிரிவு துவங்கப்பட்டது. இந்த பிரிவில் இருந்து தற்போது, எக்ஸ்புளோரர் வி4 என்கிற பெயரில் புதிய ரைடிங் ஜாக்கெட்டை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், இந்த ஜாக்கெட்டில் போதுமான பாதுகாப்பும் கிடைக்கும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் எக்ஸ்புளோரர் வி3 ரைடிங் ஜாக்கெட்டிற்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது அதனை காட்டிலும், புதிய எக்ஸ்புளோரர் வி4 ரைடிங் ஜாக்கெட் மேம்பட்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. கவர்ச்சிக்கரமான வண்ண நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்புளோரர் வி4 ஆனது ரைடிங் ஜாக்கெட் டிசைனில் புதிய ஸ்டாண்டர்டை அமைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய ரைடிங் ஜாக்கெட்டில் தோள்பட்டை பகுதியிலும், கை முட்டி பகுதியிலும் டி3ஓ லெவல் 2 பாதுகாப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான கால நிலையிலும் பயன்படுத்தக்கூடிய பைக் ரைடிங் ஜாக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்புளோரர் வி4 அதிகுளிர் சூழலுக்கும் ஏற்றது, அதேநேரம் வெயில் மிகுந்த பகுதியிலும் உடுத்துவதற்கு ஏற்றது என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.
காற்றோட்டத்திற்காக ஜாக்கெட்டில் தேவையான இடங்களில் துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 'எர்கோ புரோ டெக்' லெவல் 2 பேக் பாதுகாப்பு கவசம் மற்றும் மார்பு பகுதிக்கான பாதுகாப்புகாக அந்த பகுதியில் பிரத்யேகமாக பாக்கெட்களை கொண்டுள்ளதால், புதிய எக்ஸ்புளோரர் வி4 ரைடிங் ஜாக்கெட்களை தொழில்முறை ரைடர்கள் மட்டுமின்றி, பைக் ஓட்டிய அனுபவம் இல்லாதவர்களும் பயன்படுத்தலாம்.

450 GSM 100% பாலி ஃபேப்ரிக் என்ற சூப்பர்ஃப்ளோ துணியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரைடிங் ஜாக்கெட்டின் ஆயுட்காலமும் நீண்ட காலத்திற்கும் இருக்கும். இந்த பாலி ஃபேப்ரிக் ஆனது 8000எம்.எம் நைலானால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் ஜாக்கெட்டின் தோள்பட்டை மற்றும் கைமுட்டி பகுதிகளில் CORDURA பிட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் பைக்கை ஓட்டும்போது பாதுகாப்பிற்காக ஜாக்கெட்டின் பின்பகுதியில் ஒளி எதிரொலிப்பான் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், YKK ஜிப்கள் மற்றும் ட்ருட்ரை வாட்டர்ப்ரூஃப் பாக்கெட்டும் இந்த ரைடிங் ஜாக்கெட்டில் உள்ளன. இதனால், ஸ்டைலான ஃபிட்டிங்கில் பாதுகாப்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரைடிங் ஜாக்கெட்டை பைக் ரைடர்கள் சவுகரியமாகவும் உபயோகப்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, ஒரு வருடத்தின் கோடைக் காலத்தில்தான் மோட்டார்சைக்கிள் ரைடிங்குகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்தியாவில் கோடை காலம் வழக்கம்போல் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதை டார்க்கெட் செய்து இந்த புதிய எக்ஸ்புளோரர் வி4 ரைடிங் ஜாக்கெட்டை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தி உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications









