தமிழக தயாரிப்பிற்கு வெளிநாட்டில் செம டிமாண்ட்! ராயல் என்ஃபீல்டின் இந்த பைக்கை வெளிநாட்டுல வாங்கி குவிக்குறாங்க
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழகத்தில் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்நிறுவனம் தமிழகத்தில் தயாரித்த பைக்குகளை அதிக அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளன. இதனால் அந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை என்பது மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை அறிக்கை வெளியானது. அதில் அந்நிறுவனம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த பைக்குகளில் எண்ணிக்கை குறித்த தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 8,013 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 7,108 வாகனங்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 12.73 சதவீதம் ஏற்றுமதி என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் 5,631 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்திருந்தது. இதை ஒப்பிடும்போது தற்போது 42.30 சதவீதம் ஏற்றுமதி என்பது வளர்ச்சி அடைந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளை விட வெளிநாடுகளில் 650 சிசி பைக்குகளுக்கு தான் நல்ல டிமாண்ட் இருக்கிறது. வெளிநாட்டில் இந்த அதிக சிசி கொண்ட பைக் விற்பனை ஒரு மேஜிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. இனி ஒவ்வொரு பைக் வாரியான ஏற்றுமதி விபரங்களை காணலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிக டிமாண்ட் உள்ள பைக்காக சூப்பர் மீட்டியோர் பைக் தான் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 224 பைக்குகள் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ஆகியுள்ளன. இதுவே கடந்த ஜனவரி மாதம் வெறும் 550 பைக்குகள் தான் ஏற்றுமதியாகின்றது. தற்போது 286.18 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்த பைக் மட்டும் 26.51% பங்கை வைத்துள்ளது.
அடுத்ததாக வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்க்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1560 பைக்குகள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்த பைக்கின் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையை ஒப்பிடும்போது 102.07% வளர்ச்சியும், கடந்த ஜனவரி மாத ஏற்றுமதி விபரத்தை ஒப்பிடும்போது 868.94 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது இந்த பைக் மீது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு ரசிகர்கள் இருப்பதால் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஏற்றுமதி விபரத்தை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 1283 பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1731 பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளது. அதை ஒப்பிடும்போது தற்போது 25.88% ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதம் 1165 பைக்குகள் தான் ஏற்றுமதியாகியிருந்தது அதை ஒப்பிடும்போது 10.13 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மீட்டியோர் 350 பைக்கை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் 1251 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளன. இது 23.98% ஏற்றுமதி வீழ்ச்சியாகும். ராயல் என்ஃபீல்டு ஹன்டர் பைக்கை பொறுத்தவரை 873 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளன. இது 46.93 சதவீதம் ஏற்றுமதி வீழ்ச்சியாகும். இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி சந்தித்தாலும் ஒரு சில செக்மெண்ட்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

650 சிசி கொண்ட கான்டினென்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர் ஆகிய பைக்குகளை பொருத்தவரை 61 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. புல்லட் 350 பைக்கை பொறுத்தவரை 321 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது வெளிநாடுகளில் தனது தயாரிப்புகளை அதிக அளவு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் வெளிநாடுகளில் பிரபலமாகி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றன. இது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தை இந்தியாவிற்கு கொண்டுவரும் திறன் கொண்டதாக இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழகத்தில் இந்த தயாரிப்புகளை தயாரித்து வரும் நிலையில் தமிழக தயாரிப்புகளுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









