வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் இந்தியாவில் உள்ள இளைஞர்களை கவர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கும் பைக்காக மாறி உள்ளது. இந்த பைக்குக்கு வெளிநாட்டிலும் நல்ல மவுசு இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பைக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு மிகப் பிடித்தமான பைக் என்றால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் தான் முதலிடத்தை பிடிக்கும். அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இளைஞர்கள் பலர் இந்த நிறுவனத்தின் பைக்குகளை வாங்கி ஓட்ட வேண்டும் என்பதை ஒரு கனவாக வைத்திருக்கிறார்கள்.

Royal enfield exports march 2024

இதேபோல வெளிநாட்டிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு நல்ல மவுசு இருந்து வந்தது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்கில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத ஏற்றுமதி நிலவரம் குறித்த அறிக்கையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 9,507 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதியான 12,351 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 35.03 சதவீதம் குறைவாகும். இது மிகப் பெரிய அளவிற்கான ஏற்றுமதி வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு மவுசு குறைந்து வருவது நமக்கு தெரிகிறது.

Royal enfield exports march 2024

ஆனால் இதே விற்பனை எண்ணிக்கையை கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 18.64% அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் போட்டி நிறுவனங்கள் இதே செக்மென்டில் ஏகப்பட்ட பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்து விட்டதால், மக்கள் அந்த பைக்குகள் மீது ஆர்வம் கொண்டு விட்டார்கள்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் மொத்தம் 2,667 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்த எண்ணிக்கையை கடந்த மார்ச் 2023-ம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 340.10 சதவீதம் அதிகமாக ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத எண்ணிக்கை ஒப்பிடும்போது 70.96 சதவீதம் அதிகமாக ஏற்றுமதி ஆகியுள்ளது.

Royal enfield exports march 2024

அடுத்ததாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கை பொறுத்தவரை 1816 பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாத ஏற்றுமதி எண்ணிக்கையை ஒப்பிடும்போது 10.66% அதிகமாகும். இதுவே கடன் பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையை ஒப்பிடும்போது 45.16 சதவீதம் அதிகமாகும்.

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மற்ற கிளாசிக் 350, சூப்பர் மீட்டியோர், ஹன்டர் 350 மற்றும் 650 ட்வின்ஸ் ஆகிய பைக்குகளில் ஏற்றுமதி மிகப் பெரிய அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதில் புல்லட் 350 பைக்கின் ஏற்றுமதி 24.61% அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் 400 பைக்குகள் ஏற்றுமதியாகி உள்ளன. சூப்பர் மீட்டியோர் பைக் கடந்த பிப்ரவரி மாத ஏற்றுமதியை விட மார்ச் மாத ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

Royal enfield exports march 2024

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல மவுசு இருக்கிறது. இளைஞர்கள் பலர் இந்த பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு மெல்ல மெல்ல குறைந்து வருவது இந்த ஏற்றுமதி சரிவில் நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய பைக்குகளை களம் இறக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தங்கள் பைக்குகளில் புதிய தொழில்நுட்பங்களையும் உட்படுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறிப்பிட்ட ரக செக்மெண்டில் உள்ள பைக்குகளை விரும்பும் இளைஞர்களை ஈர்க்கும் வகையான பைகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று காலமாற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய இளைஞர்களின் விருப்பம் வேறாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்ற பைக்குகளை களம் இறக்கினால் தான் மார்க்கெட்டில் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 10:39 [IST]
English summary
Royal enfield exports march 2024 35 percent decrease
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X