பெட்ரோல் வண்டியெல்லாம் ஒரம் போ! ராயல் என்ஃபீல்டு இவி வந்தாச்சு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகள் மூலம் மக்களை ஈர்த்துள்ளது. தனித்துவமான தயாரிப்புகளுக்காக இந்நிறுவனம் பெயர் பெற்றது. இன்று 90ஸ் கிட்ஸ்கள் அனைவருக்கும் ராயல் என்ஃபில்டு நிறுவனத்தின் பைக்குகளை வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால் தொடர்ந்து இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தயாரிப்பகளில் உள்ளஇன்ஜினிற்காகவும் அதிலிருந்து வரும் சத்தத்திற்காகவும் நல்ல பெயர் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் டிரெண்ட் துவங்கியுள்ளது. மக்கள் பலர் பெட்ரோலுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் களம் இறங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக தனது முதல் எலெக்ட்ரிக் பைக்காக ---என்ற பைக்கை இன்று சர்வச அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் -- என்ற விலையில் தற்போது அறிமுகமாகியுள்ளது. ராயல் என்ஃபீல்டு எலெகட்ரிக் பைக்கில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் உள்ளன? இதில் உள்ள தொழிற்நுட்பம் என்ன? விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குளை விற்பனை செய்வதற்காகவே ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) என்ற பெயரை பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் இனி இந்த பிராண்டின் கீழ் தான் தனது எலெக்ட்ரிக் பைக்குகளை களம் இறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்ட பைக்குகளாக இந்தபைக் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை குறைக்கும் வகையில் வரலாற்றில் இந்நிறுவனம் குறைந்த எடை கொண்ட பைக்குகளை பாராசூட் மூலம் டெலிவரி செய்ததால் பாராசூட்டை லோகோவாக வைத்துள்ளது.

இந்த பாராசூட் லோகோவில் எலெக்ட்ரிக் சிம்பள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் ஃபிளையிங் ஃபிளே என்பதை குறிக்கும் விதமாக FF என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் முதல் பைக்காக சி6 என்ற பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் சிங்கிள் சீட்டர் பைக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் வடிவமைப்பை பொருத்தவரை முன்பக்கம் வித்தியாசமான ஃபோர்க் வழங்கப்ட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டிலேயே இப்படியான போர்க் கொண்ட பைக் இது தான். சாதாரணமாக பைக்கில் பெட்ரோல் டேங்க் மற்மு் சிலிண்டர் இருக்கும் பகுதியில் இந்த பைக்கில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே சிங்கிள் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் ஹெட்லைட் வழங்கமாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் இருப்பது போல வட்டமான ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல வட்ட வடிவிலான டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தனித்துவமான டிசைன் மொழியிலேயே இந்த பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள மட்கார்டு மற்றும் டெயில் லைட் பகுதியும் ராயல் என்ஃபீல்டு பைக்கின் தனித்துவ டிசைன் மொழியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக இந்நிறுவனம் ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் தனது ஸ்கிரம்பிளர் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக எஸ் 6 என்ற தயாரிப்பை காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அம்சங்கள் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் அலுமினியம் ஸ்போக் வீல், யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்சன், 60 சதவீதம் கூடுதலாக பயணிக்கும் வகையிலான சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது.
இது போக இந்த பைக்கில் என்ட்ரிரோ இன்ஸ்பயர் செய்யப்பட்ட ஒரு நீளமான சீட் வழங்கப்பட்டுள்ளது. இப்படியான சீட் சமீபத்தில் வெளியான பஜாஜ் சிஎன்ஜி பைக்கான ஃப்ரீடம் பைக்கிலும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பைக் 0-100 கிமீ வேகத்தை விரைவாக பிக்கப் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்சிப்பட்ட பைக்கும் எஸ்6 பைக்கும் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்ச்சியின் போது இந்நிறுவனம் தனது சி6 பைக்கை சோதனை செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டது. அதில் இந்தபைக் அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் இருந்தது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் அதுவாக கூட இருக்கலாம். இந்த பைக்கை இந்நிறுவனம் சிட்டி பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









