ராயல் என்ஃபீல்டு இவி எப்ப இந்தியாவுக்கு வருது தெரியுமா? அவரே சொன்ன ரகசிய தகவல் இது!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பைக்குகளுக்காக தனியாக ஃப்ளையிங் ஃபிளே என்ற புதிய பிராண்ட் உருவாக்கி அதில் முதல் எலெக்ட்ரிக் பைக்கை சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த பைக் இந்தியாவிற்கு வருமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இந்த பைக் குறித்த சில முக்கிய தகவல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் காலடித்தடத்தை எடுத்து வைக்கும் முயற்சியை அறிவித்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனியான ஒரு பிராண்டை உருவாக்கி ஃப்ளையிங் ஃபிளே என அதற்கு பெயர் வைத்துள்ளது. இனி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் இந்த ஃபிளையிங் ஃபிளே என்ற பிராண்டில் தான் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் பைக்காக சி6 என்ற எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் இத்தாலியில் நடந்து வரும் EICMA 2024 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது.

இந்த பைக் பலரது கவனத்தை ஈர்த்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தனித்துவமான லுக மற்றும் அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கில் இடம் பெற்றிருந்தன. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு பைக் என பார்த்த உடனேயே சொல்ல தோன்றும் அளவுக்கு இதன் வடிவமைப்பு இருந்தது. இதனால் பலர் இந்த பைக் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். முக்கியமாக இந்தியாவில் பலர் இந்த பைக்கை வாங்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கில் முதலில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மார்க்கெட்டில் மட்டுமே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக் ஒரு பிரீமியம் ரக பைக் இதன் விற்பனை திட்டம் வேறுபட்டதாக இருக்கிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பலர் இந்த பைக்கை ஐரோப்பா மற்றும் அமெரிக்க மார்க்கெட்டில் தான் அதிக நபர்கள் வாங்குவார்கள் என அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதனால் இந்நிறுவனம் இந்த பைக்கை தற்போது இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் இல்லை எனவும் எதிர்காலத்தில் சூழ்நிலைகள் எல்லாம் ஒத்து வந்தால் இந்தியாவிற்கு இந்த பைக் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கிற்க்கு நல்லா வரவேற்பு இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட இந்த பைக் ப்ரீமியம் ரகமாக இருப்பதால் விலை அதிகமாக இருக்கும். இதனால் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் விற்பனையை எதிர்பார்க்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மார்க்கெட்டை தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக் மற்றும் பிரேஸிலின் சாவ் பாலோ ஆகிய நகரங்களிலும் இந்த பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சித்தார்த் லால் கூறும்போது: "இந்தியாவும் எங்களுக்கு முக்கியமான நாடு தான். ஆனால் மற்ற நாடுகளில் இந்த பைக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே சி6 பைக்கை ஒவ்வொரு மார்க்கெட்டிலும் படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது இந்தியாவிற்கும் ஒரு கட்டத்தில் வரும். இந்தியாவிலும் இந்த பைக்குக்கு ஓரளவு வரவேற்பு இருக்க தான் செய்யும் என அவர் கூறியுள்ளார்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த சி6 பைக் மூலம் தனது பெட்ரோல் பங்கில் உருவாக்க முடியாத புதிய செக்மெண்டில் இந்த பைக்கை உருவாக்கி களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மிட்-சைஸ் பைக் செக்மெண்டில் அந்நிறுவனம் எக்ஸ்பிளோர் செய்யாத பல்வேறு பகுதிகளை எக்ஸ்ப்ளோர் செய்வதற்கு இந்த எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எப்பொழுதும் ஒரு மிட்-சைஸ் செக்மென்ட் பைக்குகளையே தயாரிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் என்ட்ரி லெவல் பைக்குகளை தயாரிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் மிட்-சைஸ் வாகன அடிப்படையிலான பைக் விலை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதனால் குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் எதிர்பார்ப்பது என்பது பகல் கனவான விஷயமாக தான் இருக்கும்.
பொதுவாக தனி பிராண்டில் ஒரு பைக் வரும்போது அது முதலில் பிரிமியம் செக்மென்ட் பைக்காக தான் அறிமுகமாகும். அப்பொழுதுதான் அந்த பிராண்டுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதை வைத்து மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை பொறுத்து அடுத்த பைக்குகளை நிறுவனம் தயாரிக்கும். இந்த நடைமுறையை தான் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் பின்பற்றி முதல் பைக்காக சி6 என்ற ப்ரீமியம் பைக்கை வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கை மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டுக்கு இந்த பைக்கை கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இங்குள்ள ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்தியாவிற்கு என பிரத்தியேகமாக நிறுவனம் தனி பைக்கை உருவாக்கி இந்திய மார்க்கெட்டில் களம் இறக்கினால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications









