இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கு.. ராயல் என்பீல்டு இப்படி ஒரு பேருல புதிய பைக்கை அறிமுகம் செய்ய போகுதா!!

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield), மோட்டோவெர்ஸ் 2024 (Motoverse 2024) நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி கோவாவிலேயே நடைபெற இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அது நடைபெற இருக்கின்றது. இதற்கு நுழைவு கட்டணம் உண்டு. ரூ. 3,500 நுழைவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கு பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

மிக முக்கியமாக தன்னுடைய புதுமுக தயாரிப்புகள் சிலவற்றையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது. அந்தவகையில், கோன் கிளாசிக் 350 (Goan Classic 350), எனும் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளையும் இங்கு வைத்து அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Royal enfield goan classic 350 teaser

இதை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புதுமுக பைக்கின் டீசர் படங்களை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி மோட்டார்வெர்ஸ் நிகழ்ச்சியில் இந்த பைக் வெளியீடு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இந்தசூழலிலேயே டீசர் படம் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

இதுவே இந்த பைக்கின் டீசர் படம் வெளியிடப்படுவது முதல் முறையாகும். கோன் கிளாசிக் 350 ஓர் பாபர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். கிளாசிக் 350 பைக்கை உருவாக்கும் பிளாட்பாரத்தைக் கொண்டே இந்த பைக்கை ராயல் என்பீல்டு தயார் செய்திருக்கன்றது. ஜே-பிளாட்பாரம்-மே அதுவாகும்.

இந்த பிளாட்பாரத்தைக் கொண்டு ராயல் என்பீல்டு உருவாக்கும் ஐந்தாவது தயாரிப்பு இது என்பது கவனிக்கத்தகுந்தது. கிளாசிக், புல்லட், மீட்டியோர் 350 மற்றும் ஹண்டர் ஆகிய பைக் மாடல்களே ஜே பிளாட்பாரத்தைக் கொண்டு ராயல் என்பீல்டு தயார் செய்து வருகின்றது. ஆகையால், இந்த பைக்குகளைப் போலவே அதிக ஸ்டைலிஷான மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய பைக் மாடலாக கோன் கிளாசிக் 350 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், சில தனித்துவமான அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த பைக் இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படம் உள்ளது. டீசர் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட லோகோ காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த லோகேவே வாகனத்தில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Royal enfield goan classic 350 logo teaser

எஞ்சின் உள்ளிட்ட பிற அம்சங்களில் கிளாசிக் 350 பைக்கை பிரதிபலிக்கும் வகையிலேயே கோன் கிளாசிக் 350 பைக் இருக்கப் போவதாகக் கூறப்படுகின்றது. 349 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரே கிளாகிச் 350 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை உருவாக்கும்.

இந்த மோட்டாரைக் கொண்ட கோன் கிளாசிக் 350 பாபர் பைக்கே வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற இஐசிஎம்ஏ 2024 வாகன கண்காட்சியின் வாயிலாக தன்னுடைய முக்கிய தயாரிப்புகள் மற்றும் வருங்கால தயாரிப்புகள் சிலவற்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு அதன் எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இஐசிஎம்ஏ-வில் வைத்தே முதன் முதலில் அறிமுகம் செய்தது. ஃப்ளையிங் ஃபிளியா சி6 மற்றும் ஃப்ளையிங் ஃபிளியா எஸ்6 ஆகியவற்றையே அது அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியின் வாயிலாகவும் தன்னுடைய தயாரிப்பை வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகையால், இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலரின் கவனம் ராயல் என்பீல்டு பக்கம் தற்போது திரும்பி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 14:55 [IST]
English summary
Royal enfield goan classic 350 bike teased first time more details
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+