புல்லட்டை விட இனி இது தான் கெத்து! ராயல் என்ஃபீல்டின் இந்த பைக்கை பாத்தீங்களா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று கோவாவில் நடந்து வரும் மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் தனது கோன் கிளாசிக் 350 என்ற பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் a^2.35 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த பைக்காக இருக்கிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 350 சிசி செக்மெண்டில் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் இந்த செக்மெண்டில் உள்ள பைக்குகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த செக்மெண்டில் தங்கள் அணிவகுப்பை அதிகரிப்பதற்காக அந்நிறுவனம் கோன் கிளாசிக் 350 என்ற புதிய பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கோன் கிளாசிக் 350 பைக்கை பொறுத்தவரை ஒரு பாபர் ஸ்டைல் பைக்காக சிங்கிள் சீட் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பைக் சிறப்பான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் பிராக்டிகல் மற்றும் சொகுசு அம்சங்கள் சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்க பில்லியன் சீட் ஒரு ஆப்ஷனாக இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த போன் கிளாசிக் 350 பைக்கை தனது ஜே பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது. இந்த பைக் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் வயர் ஸ்போக் வீல்களுடன் டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பின்பக்கம் 16 இன்ச் வீலும், முன்பக்கம் 19 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. டியூப்லெஸ் டயர் பொருத்தப்படுவது இந்த செக்மெண்டிலேயே இதுதான் முதல் முறை. இதில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் வால் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் ரைடிங் பொசிஷன் கிளாசிக் 350 பைக்கில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கிளாஸ் 350 பைக்கில் 805மிமீ உயரத்தில் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கில் சீட்டின் உயரம் குறைக்கப்பட்டு 750 மிமீ உயரத்தில் சீட் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கால் வைக்கும் இடங்கள் மீட்டியோர் 350 பைக்கில் இருப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் ஹேண்டில் பார்க்கும் க்ரூஸர் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு களைப்பில்லாமல் இருக்கும் வகையில் ரைடிங் பொசிஷன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள இன்ஜினில் எந்தவித மாற்றங்களும் இல்லை. கிளாசிக் 350 பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 350 பைக்கை விட இந்த பைக் இரண்டு கிலோ எடை அதிகமாக இருக்கிறது. அதாவது 197 கிலோ எடை இருக்கிறது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 170 மிமீ உயரம் வழங்கப்பட்டுள்ளது. 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் மொத்தம் 4 விதமான கலர் ஸ்கீம்கள் வழங்கப்பட்டுள்ளன. 350 செக்மெண்டிலேயே 650 cc பைக்குகளில் இருப்பதை போல மெட்டல் கியூப் ஸ்பீச் கொண்ட ஆப்ஷன் இந்த பைக்கில் தான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்டப் 350 பைக்கில் இருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்டைலுக்காக இந்த செட்டப் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ2.35 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மற்ற விலை விபரங்கள் மற்றும் பைக்கின் ஆக்ஸசரீஸ் குறித்த விபரங்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கோன் கிளாசிக் 350 பைக்கை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வரும் போது மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









