கண்டிப்பா ஹிட்டு தான்... டீன் ஏஜர்ஸ் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போகும் ராயல் என்ஃபீல்டு பைக்!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புத்தம் புதிய கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) மோட்டார்சைக்கிளை விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் விற்பனைக்குவர உள்ள புதிய கோன் கிளாசிக் 350 பைக்கை பற்றிய விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பைக்கின் விலை அறிவிக்கப்பட வேண்டியது மட்டும் தான் பாக்கி. புதிய ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு விளங்குவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் உலகளவில் பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த நிறுவனம் 650சிசி பைக்குகளை உற்பத்தி செய்வதே வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்காக தான்.

royal enfield goan classic 350

ஆனால், விரைவில் விற்பனைக்கு வருவது ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 என்கிற ஒற்றை இருக்கை கொண்ட 350சிசி பைக் ஆகும். இதனை பாப்பர்-ஸ்டைல் பைக் என அழைக்கின்றனர். இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போதைக்கு மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு பைக் கிளாசிக் 350 ஆகும்.

இத்தகைய பைக்கை மேலும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டே கோன் கிளாசிக் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு விற்பனைக்கு கொண்டுவருகிறது. வருகிற நவம்பர் 23ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறவுள்ள மோட்டோவெர்ஸ் 2024 நிகழ்ச்சியில் புதிய கோன் கிளாசிக் 350 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, அன்றைய தினத்தில்தான் பைக்கின் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், தற்போது பைக்கை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், சிங்கிள்-சீட் செட்-அப்பை தவிர்த்து பார்த்தால் வழக்கமான கிளாசிக் 350 பைக்கையே புதிய கோன் கிளாசிக் 350 பைக்கும் ஒத்துக் காணப்படுகிறது. வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட், நீர்த்துளி வடிவில் பெட்ரோல் டேங்க் மற்றும் வளைவான ஃபெண்டர்கள் உள்ளிட்டவை கோன் கிளாசிக் 350-இல் இடம்பெற்றுள்ளன.

royal enfield goan classic 350

இருப்பினும், இந்த பைக்கின் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒரேயொரு இருக்கை ஆகும். இதற்கேற்ப ஹேண்டில்பார் நன்கு உயரமானதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பாப்பர்-ஸ்டைல் பைக்கை விரும்புபவர்களுக்கு கோன் கிளாசிக் 350 ஆனது ஏற்ற பைக்காக இருக்கும். புதிய கோன் கிளாசிக் 350 பைக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதன் வெள்ளை நிற சுவர்களை கொண்ட டயர்கள் ஆகும். இது பைக்கிற்கு ஸ்போர்டியான லுக்கை கொடுக்கிறது.

இந்த பைக்கில் வயர்-ஸ்போக் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. என்னென்ன கலர் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்படும் அதே 349சிசி, ஜே-சீரிஸ், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. க்ராடில் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கோன் கிளாசிக் 350 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்தில் தோன்றி தற்சமயம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் 350சிசி பாப்பர்-ஸ்டைல் பைக்காக புதிய கோன் கிளாசிக் 350 விளங்குகிறது. அதாவது, 350சிசி என்ஜின் உடன் சிங்கிள்-சீட் பைக்கை இப்போதுதான் முதல்முறையாக ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. கிளாசிக் 350 பைக் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதால், புதிய கோன் கிளாசிக் 350 பைக்கிற்கும் நிறைய கஸ்டமர்கள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 20:19 [IST]
English summary
Royal enfield goan classic 350 unveiled design features engine check all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+