இந்தியாவே தவம் கிடந்த புது ராயல் என்ஃபீல்டு பைக்... வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக குரில்லா 450 (Guerrilla 450) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குரில்லா 450 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மேவ்ரிக் 440, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440, டிரையம்ப் ஸ்பீடு 400 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விலையில் கிடைக்கும் இந்த ஆக்ஸஸரீகள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் புதிய 450சிசி ஸ்ட்ரீட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக குரில்லா 450 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆக்ஸஸரீகளின் விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வழங்கப்படும் இதே ஆக்ஸஸரீகளின் விலைகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

புதிய குரில்லா 450 பைக்கிற்கு முக்கியமான ஆக்ஸஸரீயாக என்ஜின் பகுதியை பாதுகாக்கும் சம்ப் கார்ட்டை பெற்றுக் கொள்ளலாம். கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் இந்த பாதுகாப்பானை ரூ.3,450 என்கிற விலையில் வாங்கலாம். இது தொலைத்தூர பயணங்கள் மற்றும் கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும் போது ஏற்றதாக இருக்கும்.
இதேபோல், ஹேண்டில்பாரில் கண்ணாடிகளையும் வித்தியாசமான டிசைன்களில் பெற்றுக் கொள்ளலாம். பார்-எண்ட் மிரர்ஸ் மற்றும் டூரிங் மிரர்ஸ் என்கிற பெயர்களில் ஆக்ஸஸரீகளாக வழங்கப்பட்டுள்ள இந்த மிரர்களின் விலைகள் ரூ.6,450 மற்றும் ரூ.6,850 ஆக மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் உள்ளது. பொருட்களை எடுத்துச் செல்வதற்காக கருப்பு நிறத்தில் ஹேங்கர்களை பின் இருக்கைக்கு இரு பக்கமும் பெறலாம்.

இதற்கான விலை ஜோடி ஒன்றிற்கு ரூ.3,000 என்கிற அளவில் உள்ளது. மேலும், அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்பவர்கள் நீர்புகா தன்மை கொண்ட பைகளையும் ஆக்ஸஸரீகளாக பெறலாம். இந்த பை ஒன்றின் விலை ரூ.2,750 என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு குரில்லா 450 பைக் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏகப்பட்ட ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சில்வர் நிறத்தில் ரேடியேட்டர் கிரில் (ரூ.1,950), கருப்பு நிறத்தில் ஹெட்லைட் கிரில் (ரூ.1,950), என்ஜின் கார்ட்கள், ஹெட்லைட் கௌல் மற்றும் விண்ட்ஷீல்டு உள்ளிட்டவற்றை கூடுதல் விலையை செலுத்தி புதிய குரில்லா 450 பைக் உடன் பெறலாம். இன்னும் சவுகரியமான பயணத்தை விரும்புபவர்கள் இந்த பைக்குடன் ஆகஸ்ஸரீகளாக வழங்கப்பட்டுள்ள இருக்கைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

இத்தகைய இருக்கைகளினால் உங்களது குரில்லா 450 பைக்கின் தோற்றம் கூட சற்று மாறுப்படலாம். இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கில் 452சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 39.50 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 40 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்ஸஸரீகள் இல்லாமலேயே புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக் பார்ப்பதற்கு சூப்பராக உள்ளது. அப்படியென்றால், ஆக்ஸஸரீகள் உடன் இன்னும் அருமையானதாக இருக்கும் என்பது உறுதி. பைக்கை முன்பதிவு செய்யும்போதே இந்த ஆக்ஸஸரீகளையும் உங்களால் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ஆக்ஸஸரீகளுடன் பைக் எவ்வாறு இருக்கும் என்பதை விர்ட்சுயுவலாக ஒவ்வொன்றையும் பொருத்தி பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









