ராயல் என்பீல்டு குவரில்லா 450 இத்தன பேருக்கு போட்டியா வர போகுதா! இப்பவே பதற்றத்தின் உச்சியில் போட்டியாளர்கள்!
இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு குவரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) பைக் மாடல் இருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த மாதம் 17ஆம் தேதி குவரில்லா 450 பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஹிமாலயன் 450 பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடலே கெரில்லா 450 ஆகும்.
இந்த பிரிவை மையப்படுத்தி ஏற்கனவே பல்வேறு பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இருப்பினும், கெரில்லா 450 மோட்டார்சைக்கிள் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அளவிற்கு ஒர்த்தான பைக்தானா இந்த குவரில்லா450 என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் ஆராய இருக்கின்றோம். குறிப்பாக, குவரில்லா 450-க்கு போட்டி என கூறப்படும் அந்த பைக் மாடல்களின் சிறப்புகள் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400): பஜாஜ்-டிரையம்ப் இரு நிறுவனங்களின் கூட்டணியில் டிரையம்ப் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களே ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை ஆகும். இதில் மிக முக்கியமாக ஸ்பீடு 400 பைக்கிற்கே குவரில்லா 450 பைக்கின் வருகை போட்டியாக அமைய உள்ளது.
ரூ. 2.20 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 398.15சிசி, லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி, 4வால்வுகள் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்மாக 39.5 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 37.5 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும்.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure): இந்திய இளைஞர்கள் பலரின் பிரியமான பைக் மாடலாக இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இருக்கின்றது. குவரில்லா 450 விற்பனைக்கு வரும் எனில் அது இந்த பைக்கிற்கும் மிகப் பெரிய போட்டியாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி இந்த பைக் மாடல் இந்தியாவில் ரூ. 3.41 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு இரண்டிற்குமான பைக் மாடல் இதுவாகும். இந்த பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 42.3 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த கியர்பாக்ஸில் மிக சிறப்பான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்குவதற்காக பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக, இன்வெர்ட்டர் அல்லாத ஃபிரண்ட் ஃபோர்க், டபிள்யூபி அபெக்ஸ் ரியர் மோனோ ஷாக், இரு வீல்களிலும் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெனெல்லி டிஆர்கே 502 எக்ஸ் (Benelli TRK 502X): கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கைத் தொடர்ந்து குவரில்லா 450 பைக்கின் வருகை பென்னெல்லி நிறுவனத்தின் டிஆர்கே 502 எக்ஸ் மாடலுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. இது ஓர் 500 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.
இந்த இரட்டை சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் சாகசங்கள் நிறைந்த பயணத்திற்கு ஏற்றதாக அப்பைக்கை மாற்றி இருக்கின்றது. 8,500 ஆர்பிஎம்-மிலேயே இந்த மோட்டார் அதிகபட்சமாக 35 KW பவரை வெளியேற்றும். அப்சைடு-டவுன் ஃபோர்க் (USD Fork), ஏபிஎஸ் அம்சத்துடன் கூடிய டிஸ்க் பிரேக், டிரெஸ்டில் ஸ்டீல் ட்யூப் மற்றும் பிளேட் ஆகிய சிறப்புகளைக் கொண்டதே இந்த பைக் மாடல் ஆகும். இதன் விலை ரூ. 6.35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு பைக் மாடல்களுக்கு போட்டியாகவே குவரில்லா 450 விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், குவரில்லா 450 பைக் மாடலானது ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 (X440), ஹீரோ மேவ்ரிக் 440 (Mavrick 440), கேடிஎண் 390 ட்யூக் (390 Duke), யெஸ்டி (Yezdi Roadster), சிபி300ஆர் (CB300R) மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 310 (Apache RTR 310) உள்ளிட்ட பைக் மாடல்களுக்கே போட்டியாக அமைய உள்ளது.
ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்: கெரில்லா 450 பைக்கை விலை குறைவாக விற்பனைக்காக வழங்க வேண்டும் என்பதற்காக அதில் யுஎஸ்டி ஃபோர்க்குகளுக்குப் பதிலாக, கருப்பு ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்-கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல வேலைகளை ராயல் என்பீல்டு பைக்கில் விலை குறைப்பிற்காக செய்திருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை, 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) மோட்டாரே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40.02 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் இடம் பெற உள்ளது.
இத்துடன் சிறந்த ரொடு அனுபவத்திற்காக மோனோஷாக் மற்றும் குறுகிய வீல்பேஸ் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஸ்பிலிட் வகை இருக்கை, பன்முக ரைடு மோடுகள், ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், அகலமான ஹேண்டில்பார் போன்ற அம்சங்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் குவரில்லா 450 பைக்கிற்கும் நல்ல டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, குறைவான விலையில் ஓர் அட்வென்சர் பைக்கை தேடுவோருக்கு இந்த பைக் சூப்பரான தேர்வாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








