இந்த பைக்குல இவ்வளவு நுணுக்கமான விஷயமெல்லாம் இருக்குதா? ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பற்றிய முக்கிய தகவல்கள்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்ஸிலோனாவில் தனது குரில்லா 450 என்ற பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஒரு நியோ ரெட்ரோ ரோடுஸ்டர் பைக்காகவும் இந்த பைக்கின் விவரங்கள் குறித்த தகவல்களை மட்டும் நாம் இங்கே காண போகிறோம். இந்த பைக் குறித்த தேர்தல் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த விபரங்களை நாம் இங்கே விரிவாக காண்போம்.
புதிய குரில்லா 450 பைக்கை பொறுத்தவரை புதிய ரோஸ்டர் பைக்காக இந்த உலகிற்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் முற்றிலுமாக புதிய பைக்காக இருந்தாலும், இந்த பைக்கின் இன்ஜின் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இன்ஜின் தான் ஹிமாலயன் 450 பைக்கின் சிறிய வெர்ஷனாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் 450 பைக்கில் இருக்கும் குறைகளை எல்லாம் சரி செய்யப்பட்ட வெர்ஷனாக இதை கருதலாம்.

இந்த பைக்கில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 450சிசி சிங்கிள் சிலிண்டர் ஷெர்பா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிக்யூட் கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 84மிமீ போர் மற்றும் 81.5மிமீ ஸ்டோக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒப்பீட்டு ரேஷியோ 11.5:1 என்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் எலெக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்டர் பொருத்தப்பட்டதாகவும், 42மீமீ திராட்டல் பாடி மற்றும் ரைடு பை ஒயர் சிஸ்டம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குரில்லா 450 பைக் இன்ஜினை பொருத்தவரை ஸ்டார்ட் செய்தாலே 1300 ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 39.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 5500 ஆர்பிஎம்-ல் 40 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் செயின் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கில் கியர் மாற்றும் போது சுலபமாக இருக்கும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த குரில்லா 450 பைக்கின் மைலேஜ் குறித்த விபரங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதற்கான சோதனை செய்யப்பட்ட பின்பே இந்த மைலேஜ் குறித்த விபரங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த கொரில்லா 450 பைக்கை ஹிமாலயன் 450 பைக் தயாரான அதே ஸ்டீல் டியூப்ளர் கொண்டு உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த குரில்லா 450 பைக்கில் சப் பிரேம்கள் சற்று வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கம் 43 மிமீ போர்க் வழங்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் 450 பைக்கில் யுஎஸ்பி போர்க்குகள் வழங்கப்பட்டிருந்தன. குரில்லா 450 பைக்கில் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 310மிமீ இரண்டு பிஸ்டன் கேலிபர் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 270மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள டிஸ்க் பிரேக் சிங்கிள் பிஸ்டன் கேலிபர் மூலம் இயக்கப்படுகிறது. இதை இரண்டு டிஸ்குகளும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஹிமாலயன் 450 பைக்கை பொறுத்தவரை முன்பக்கம் 21 இன்ச் வீலும் பின்பக்கம் 17 இன்ச் வீல் செட்டப்பும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புதிய குரில்லா 450 பைக்கில் இரண்டு வீல்களும் 17 இன்ச் அளவு கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 120/70 என்ற அளவிலும் பின் பக்கம் 160/70 என்ற அளவிலும் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 2090மிமீ நீளமும், 833மிமீ அகலமும், 1125மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதில் 1440மிமீ வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சீட்டைப் பொறுத்தவரை 780மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. 169 மீமி கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த பைக்கில் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 174 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 11 லிட்டர் அளவுக்கு பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குரில்லா 450 பைக்கின் வருகைக்காக ரசிகர்கள் பலர் நீண்ட நாட்களாக காத்திருந்தார்கள். இப்படியான ஒரு பைக் ராயல் என்ஃபீல்டு இடம் இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில், இந்த பைக்கை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









