சொன்னபடியே நாளை அறிமுகமாகிறது ராயல் என்பீல்டு குவரில்லா 450.. ஒட்டுமொத்த இந்தியாவும் இதுக்காகதான் தவமிருக்கு!

இரண்டு சக்கர வாகன பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான ராயல் என்பீல்டு குவரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) பைக் இந்தியாவில் நாளைய (ஜூலை 17) தினம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ரோட்ஸ்டர் (Roadster) பைக்குகள் பிரிவில் களமிறங்க இருக்கும் இந்த பைக்கிற்கு மிகவும் சவாலான விலையை தயாரிப்பு நிறுவனம் நிர்ணயம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விலை குறைப்பு வேலைகள் இந்த பைக் மாடலில் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், கெரில்லா 450 பைக்கில் கருப்பு நிற ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்-கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. யுஎஸ்டி ஃபோர்க் (Upside-Down Fork)-கிற்கு பதிலாகவே அது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே, கொரில்லா 450 சற்று குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பதற்கு சான்றாக உள்ளது.

Royal enfield guerrilla 450 launch tomorrow

மேலும், இந்த பைக்கை ரோட்ஸ்டராக நிலைநிறுத்துவதற்கு ஏதுவாக பல தனித்துவமான அம்சங்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 17 அங்குல கருப்பு நிற அலாய் வீல்கள், பின்புற சஸ்பென்ஷனுக்கான ஆஃப்செட் மோனோஷாக் மற்றும் குறுகிய வீல்பேஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ஒற்றை துண்டு வகை இருக்கை, பன்முக ரைடிங் மோடுகள், ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், வட்ட வடிவ கண்ணாடிகள், எல்இடி ஹெட்லைட், மிதக்கின்ற ஸ்டைலிலான வட்ட வடிவ டிஎஃப்டி கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார், சற்று பின்நோக்கி அமைக்கப்பட்ட ஃபுட்பெக்குகள், மேல் நோக்கி கழிவை வெளியேற்றும் அமைப்பைக் கொண்ட எக்சாஸ்ட் என ஏராளமான அம்சங்கள் கொரில்லாவில் இடம் பெற்றிருக்கும்.

இந்த பைக்கின் வருகை இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலை குறைவான ட்ரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400) மாடல் பைக்கிற்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் - டிரையம்ப் இரு நிறுவனங்களின் கூட்டணியில் டிரையம்ப் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களே இந்த பைக் மாடல் ஆகும்.

இந்தியாவில் இந்த பைக் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.33 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. ஆன்-ரோடில் அதன் விலை ரூ. 3.38 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இத்தகைய ஓர் பைக்கிற்கு போட்டியாக ராயல் என்பீல்டு கொரில்லா 450இன் வருகை அமைய உள்ளது.

இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புகழ்பெற்ற பைக் மாடலான ஹிமாலயன் 450 (Himalayan 450)-ஐ தழுவியே உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், பல முக்கிய பாகங்களை இந்த பைக்குடன் கொரில்லா 450 பகிர்ந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த இரண்டு பைக் மாடல்களும் எஞ்சின் விஷயத்தில் ஒற்றுபோகும் வகையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

ஆமாங்க, ஹிமாலயன் 450 பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கிலும் இடம் பெற உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 40.02 பிஎஸ் பவரையும், 40 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே கொரில்லா 450 பைக்கிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த மோட்டார்சைக்கிளாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. என்னென்ன சிறப்புகளுடன் இந்த பைக் விற்பனைக்கு வருகின்றது என்பது நாளையே அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்கும் பணியில் ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே கொரில்லா 450 நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர, இன்னும் விலை குறைவான பைக் மாடல்களையும் அது நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகையால், இந்தியாவில் நிறுவனத்தின் மதிப்பு மேலும் பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2024, 11:04 [IST]
English summary
Royal enfield guerrilla 450 launch tomorrow here is features and expectations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+