ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் எவ்ளோ மைலேஜ் தரும்? இந்த விஷயத்தில் போட்டியாளர்களை தாக்கு பிடிக்குமா?

இரண்டு சக்கர வாகன பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான ராயல் என்பீல்டு குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியின் வாயிலாகவே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அறிமுக ரூ. 2.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குரில்லா 450 மோட்டார்சைக்கிளின் வருகை மூன்றுக்கும் மேற்பட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக டிரையம்ப் ஸ்ட்ரீட் 400 (Triumph Speed 400), ஹீரோ மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) மற்றும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440) ஆகிய பைக் மாடல்களுக்கே கடுமையான போட்டியாளனாக குரில்லா 450 அமைய இருக்கின்றது.

Royal enfield guerrilla 450

ராயல் என்பீல்டு நிறுவனம் தன்னுடைய இந்த புதுமுக தயாரிப்பை அதன் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றான ஹிமாலயனை தழுவியே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் பயன்படுத்தக் கூடிய எஞ்சினே குரில்லா 450 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷெர்பா 452, ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக எவ்வளவு மைலேஜ் தரும் என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் காண இருக்கின்றோம். டபிள்யூஎம்டிசி (world motorcycle test cycle) வெளியிட்டு இருக்கும் தகவலின்படி ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் லிட்டர் ஒன்றிற்கு 29.5 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இது போட்டியாளர்களைக் காட்டிலும் சற்று குறைவான மைலேஜ் திறன் ஆகும். உதாரணமாக டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் மாடல் 29.8 கிமீ வரையில் தரும் என அராய் (ARAI) சான்றளித்து இருக்கின்றது. அதேவேளையில், அதிகபட்சமாக ஹீரோ மேவ்ரிக் 440 முழுமையாக 30 கிமீ மைலேஜை வழங்கும்.

இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 35 கிலோ மீட்டர் வரையில் மைலேஜை வழங்கும். ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கில் அதிகபட்சமாக 11 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.

எனவே ஒரு முறை முழுமையாக எரிபொருள் தொட்டியை நிரப்பினால் 324.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் 452 சிசி ஷெர்பா மோட்டார், அதிகபட்சமாக 39.50 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 40 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய குரில்லா450, தனித்துவமான ஸ்டைலைக் கொண்ட மோட்டார்சைக்கிளாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்த பைக்கை மாடர்ன் மற்றும் ரெட்ரோ அம்சங்கள் நிறைந்த ஸ்ட்ரீட் நேக்கட் (Street Naked) வகை பைக்காக நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நீர் துளி வடிவிலான ஃப்யூவல் டேங்க், ஒற்றை துண்டு நீளமான அமைப்புடைய இருக்கை, சிறிய வால் பகுதி எல்இடி லைட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த பைக் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அனலாக் (Analogue), டேஷ் (Dash) மற்றும் ஃப்ளாஷ் (Flash) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றில் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய தேர்வாக ஃப்ளாஷ் இருக்கின்றது. மேலும், சில கூடுதல் நிற தேர்வுகளும் இதில் வழங்கப்படுகின்றன.

அதேவேளையில், இந்த மூன்று வேரியண்டுகளில் வாங்குவதற்கு உகந்த ஒன்றாக டேஷ் இருக்கின்றது. இதில் உயர்நிலை தேர்வில் வழங்கப்படும் அனைத்து சிறப்பம்சங்களும் இடம் பெற்றிருக்கும். வெறும் நிற தேர்விற்காக மட்டுமே இதைவிட ரூ. 5 ஆயிரம் அதிக விலையில் ஃப்ளாஷ் விற்கப்படுகின்றது. டேஷ் 2.49 லட்ச ரூபாக்கும், ஃப்ளாஷ் ரூ. 2.54 லட்சத்திற்கும் விற்கப்படும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு அதன் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைப்பதைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2024, 11:08 [IST]
English summary
Royal enfield guerrilla 450 mileage details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+