பைக்கை பார்த்தாலே வாங்க தோணுதே... ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்த புது ராயல் என்ஃபீல்டு பைக்!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிளாக குரில்லா 450 (Gurrilla 450) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஸ்ட்ரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். மார்க்கெட்டில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக, ஹிமாலயனின் என்ஜின் உடன் புதிய குரில்லா 450 களமிறக்கப்பட்டு உள்ளது. விற்பனையில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியை தர ஹீரோ மேவ்ரிக் 440, டிரையம்ப் ஸ்பீடு 400, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 உள்ளிட்ட பைக்குகள் இந்திய சந்தையில் தயாராக உள்ளன.

ரூ.2.39 லட்சம் என்கிற அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் குரில்லா 450 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கை போன்று கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், புதிய குரில்லா 450 பைக் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு கீழேயுள்ள வீடியோவை காணவும்.

royal enfield guerrilla 450 explain

அனலாக், டேஷ் மற்றும் ஃப்ளாஷ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய குரில்லா 450 மோட்டார்சைக்கிளில் 452சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 39.50 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 40 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

1,440மிமீ வீல்பேஸ் நீளம், 169மிமீ கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட குரில்லா 450 பைக்கின் எடை 185 கிலோ ஆகும். இந்த பைக்கில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் கூடுதல் பாதுகாப்புக்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. சப்-500சிசி பைக் செக்மெண்ட்டில் புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 13:34 [IST]
English summary
Royal enfield guerrilla 450 price features explain video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+