சென்னை சாலையில் இங்கும்-அங்குமா சுத்திட்டு இருந்த பைக் அறிமுகமாக போகுதா!! தேதியவே சொல்லிட்டாங்க அது தெரியாதா!!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதுமுக நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடலான "கெரில்லா" (Guerrilla) இருக்கின்றது. குறிப்பாக, இரண்டு சக்கர வாகன காதலர்களின் பலர் இந்த பைக்கின் அறிமுகத்தை நோக்கி பெரிதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே அப்பைக்கின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. ஜூலை 17 ஆம் தேதி அன்றே இந்த பைக் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

இந்த தகவலை சித் லால் அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தினார். இவரே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எம்டி ஆவார். மேலும், புதிய பைக் படத்தை பதிவிட்ட அவர், அந்த பைக் மாடலின் பெயரையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், அடுத்த மாதம் இந்த பைக் ஸ்பெயினில் சவாரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Royal enfield guerrilla 450

புதிய கெரில்லா பைக், ஹிமாலயன் 450-இன் பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் பலவற்றை பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இது நிறுவனத்தின் நுழைவு நிலை பைக் மாடலான ஹண்டர் 350-யைவிட சற்றே அதிக பிரீமியம் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய தயாரிப்பாக இருக்கும்.

கெரில்லா 450 ஆனது தலைகீழான ஃபோர்க் (Upside-Down Fork)-குகளுக்குப் பதிலாக, கருப்பு ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்-கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் விலையை சற்றே குறைவானதாக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை ராயல் என்பீல்டு பார்த்துள்ளது.

இதுபோன்று இன்னும் பல விலை குறைப்பிற்கான வேலைகள் இந்த பைக்கில் பார்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, ராயல் என்ஃபீல்டு கெரில்லா மிகுந்த சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அதன் முக்கிய போட்டியாளராக கருதப்படும் ட்ரையம்ப் ஸ்பீட் 400 (Triumph Speed 400)-ஐ விட இது மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைப்பு யுக்தியால் இந்த பைக்கின் செயல்திறனில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ நினைத்துவிட வேண்டாம். கெரில்லா பைக்கில் அதிக செயல்திறன்மிக்க எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40.02 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் இடம் பெற உள்ளது. இந்த பைக்கை ரோட்ஸ்டராக நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஏதுவாக பல தனித்துவமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அந்தவகையில் 17 அங்குல கருப்பு நிற அலாய் வீல்கள், பின்புற சஸ்பென்ஷனுக்கான ஆஃப்செட் மோனோஷாக் மற்றும் குறுகிய வீல்பேஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஸ்பிலிட் வகை இருக்கை, பன்முக ரைடு மோடுகள், ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், வட்ட வடிவ கண்ணாடிகள், எல்இடி ஹெட்லைட், மிதக்கின்ற ஸ்டைலிலான வட்ட வடிவ டிஎஃப்டி கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார், சற்று பின்நோக்கி அமைக்கப்பட்ட ஃபுட்பெக்குகள் என ஏராளமான அம்சங்கள் கொரில்லாவில் இடம் பெற்றிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு கெரில்லா, இமயமலையன் பைக்கைவிட இலகுவானதாக இருக்கும். எனவே இந்த பைக் கையாளுவதில் ஹிமாலயனைவிட மிகவும் சுலபமானதாக இருக்கும். ஆகையால், இந்த பைக்கிற்கு பலதரப்பட்ட இளைஞர்களிடம் இருந்து வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2024, 20:20 [IST]
English summary
Royal enfield guerrilla 450 set for july 17 launch what to expect
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+