ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க பிளான் போடுறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க புது பைக் வருது!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிகமாக பெருகுவார்கள் என்ற நம்பிக்கையில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இப்படியாக இந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப் போகும் புதிய பைக் ஒன்றை பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனால் பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் போட்டிக்கு வேறு நிறுவனங்களே இல்லாத அளவுக்கு தனிக்காட்டு ராஜாவாக வாகனங்களை விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் புதிதாக களமிறங்கியுள்ளதால் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளையும் தற்போது செய்து வருகிறது. இதன் ஒரு முயற்சியாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் பைக்கின் நேக்கட் வெர்ஷனை வெளியிட தற்போது திட்டமிட்டு வருகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் பெயராக கொரில்லா 450 என அந்த நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கை தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் அனைவரும் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதன் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த கொரில்லா 450 என்ற பைக்கை இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி அதிக விற்பனையை பெறும் நோக்குடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் தான் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும் அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை நிரூபணம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கை பொறுத்தவரை இது ஹிமாலயன் பைக்கின் அதே சேஸிஸ் மற்றும் இன்ஜினை மையப்படுத்தி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் சஸ்பென்ஷன் செட்டப் மட்டும் ஹிமாலயன் பைக் போல இல்லாமல் இந்த பைக்குக்கு தனியான சஸ்பென்ஷன் செட்டப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னையில் சோதனை செய்து வரும் பைக்குகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது முன்பக்கம் சிறிய கன்வென்ஷனல் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும் முன்பக்கமும் 17 இன்ச் அலாய் வீல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை ஹிமாலயன் பைக்கை விட குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸில் இது வடிவமைக்கப்படும் என தெரிகிறது. பின்பக்க சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை ஹிமாலயன் பைக்கிலும் இந்த பைக்கிலும் ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் செட்டப் தான் வழங்கப்பட்டுள்ளது.
ஹிமாலயன் பைக்கை தழுவி உருவாக்கப்படுவதால் இதன் இன்ஜினை பொறுத்தவரை சிங்கிள் சிலிண்டர் செர்ஃபா 450 இன்ஜின் தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8000 ஆர்பிஎம்மில் 39.5 பிஎச்பி பவரையும் 5500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைக்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேயும் ஹிமாலயன் பைக்கை விட சற்று லிப்ட் செய்யப்பட்டு பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் விற்பனைக்கு வரும்போது இது இளைஞர்களை கவரும் விதமான பைக்காக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கை பொறுத்தவரை அதன் செட்ட்ப் ரோடு பயாஸ் செட்டப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் சொகுசு வசதிகள் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்க்கும் கீழாக பொசிஷன் செய்யப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இது மார்க்கெட்டில் உள்ள டிரையம்ப் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கிற்கு போட்டியாக களமிறங்கவுள்ளது உள்ளது.


Click it and Unblock the Notifications








