உங்களை ஆச்சரியப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கின் 5 முக்கிய அம்சங்கள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று தனது குரில்லா 450 என்ற பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த பைக் ரூ2.39 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் விலை குறைவாக இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தினாலும், இன்னும் இந்த பைக்கில் ஆச்சரியத்தக்க பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. அதைப்பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

வடிவமைப்பு: ராயல் என்ஃபீல்டு குரில்லா 50 பைக்கை பொறுத்தவரை ஒரு ஸ்கிரம்பிளர் ரக பைக்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை ஒரு ரோடுஸ்டர், ஸ்கிராம்ப்ளர் கலந்த ஒரு வடிவமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்450 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் பின்பக்க பகுதி, சென்டர் பேனல், எக்ஸாஸ்ட் மஃப்ளர் ஹிமாலயன்450 பைக் போலவே இருக்கிறது.

Royal Enfield Guerrilla 450

ஆனால் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் சற்று சிறிதாக வழங்கப்பட்டுள்ளது. அனலாக் பிளாஷ் டேஷ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த பைக் வருகிறது. மூன்று விதமான வேரியண்ட்களிலும் வெவ்வேறு விதமான கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டாப் வேரியன்டில் வழங்கப்பட்டுள்ளன. கலர்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வீல் பகுதி எல்லாம் ஹைலைட்டான கலர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே சற்று வித்தியாசமான டிசைன் கொண்டதாக இருக்கிறது.

இன்ஜின்: ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கில் ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள அதே செருப்ப இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 450சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் ஆகும். ஹிமாலயன் 450 பைக்கில் உள்ளதை போலவே இந்த பைக்கிலும் அதே பவர் தான் இருக்கிறது. 39.5 பிஎச்பி பவர் மற்றும் 40 என்எம் டார்க் திறன் இந்த பைக்கில் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினில் எந்தவிதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை.

Royal Enfield Guerrilla 450

ஹிமாலயன் 450 பைக்கை விட இந்த பைக் குறைவான எடையில் இருப்பதால் சற்று வேகமாக பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். மற்றும் இதன் ஸ்பிராக்கெட் சைஸ் மாற்றப்பட்டுள்ளதால் டிரைவிங் அனுபவம் சற்று வித்தியாசமாக இருக்கலாம். இது பைக்கில் எக்கோ மட்டும் பெர்ஃபார்மன்ஸ் ஆகிய மோடுகள் உள்ளன. இந்த பைக்கின் முழுமையான ரைடிங் அனுபவம் ரிவ்யூவிற்கு பிறகு தான் தெரியும்.

இந்த பைக்கின் ரைடிங் போஸ்டர் ஸ்போர்ட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹேண்டில் பார்கள் அகலமாக கொடுக்கப்பட்டுள்ள ஸ்கிரம்பிளர் பைக்கில் இருப்பதை போலவே இதிலும் இருக்கிறது. கால் வைக்கும் பகுதி சற்று பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சீட்டு உயரம் 780மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராயல் என்ஃபீல்டு பைக்கை உயரமானவர்கள் மட்டுமே எளிதாக ஓட்ட முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி இந்த பைக்கை உயரம் குறைந்தவர்கள் கூட எளிதாக ஓட்ட முடியும்.

Royal Enfield Guerrilla 450

இந்த பைக்கின் சீட்டை பொருத்தவரை சிங்கிள் பீஸ் சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட் சற்று கீழே இருக்கும் படியும் பின்பக்கம் அமர்பவர்களுக்கான சீட்டு சற்று உயரமாக இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பின்பக்கம் அமருபவர்களுக்கு போதிய அளவில் இட வசதி இல்லாமல் இருக்கலாம்.

அம்சங்கள்: ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கை பொறுத்தவரை பல்வேறு அம்சங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன அக்ஷஸரி ஆகியன வழங்கப்பட்டுள்ளன. பிளாஷ் மற்றும் டேஷ் வேரியண்டில் நான்கு இன்ச் கொண்ட வட்ட வடிவிலான டிஎஃப்டி டிஸ்ப்ளே போன் கனெக்டிவிட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மேப்களை ஸ்கிரீன் மிரர் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் செல்போனில் உள்ள கூகுள் மேப் உடன் இது இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த பைக்கில் கூடுதலாக பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக மீடியா கண்ட்ரோல் மற்றும் யுஎஸ்பி-சி சார்ஜிங் போட்டு ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் செல்போனை முழுவதுமாக சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ள முடியும்.

இந்த ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக் ட்யூப்லர் ட்வின் ஸ்பார் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்பக்கம் 43 மிமீ டெலஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் அகலமான டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 17 இன்ச் அலாய் வீலில் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக் மக்கள் அதிகம் எதிர்பார்த்த பைக்காக இருக்கிறது. ஹிமாலயன் பைக்கை உயரம் குறைந்தவர்கள் ஓட்ட சிரமப்பட்டு வரும் நிலையில், அதே பைக்கை உயரம் குறைந்தவர்களும் ஓட்ட முடியும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்ட பைக்காக இந்த பைக் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2024, 9:14 [IST]
English summary
Royal enfield guerrilla 450 top highlights
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X