புது ராயல் என்பீல்டு பைக்கின் விலை இவ்ளோதானா! போட்டியாளர்கள் எல்லாம் இப்பவே ரேட்ட குறைக்க ஆரம்பிச்சுட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450). இன்னும் 15 நாட்களில், ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இன்னும் சரியாக சொல்வதென்றால், வரும் ஜூலை 17ம் தேதி ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் மேலோங்கி வருகிறது. இந்த சூழலில், இந்த புதிய பைக் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 2.30 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இந்த வேரியண்ட், சிங்கிள் டோன் பெயிண்ட் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Royal Enfield Guerrilla 450

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கில் இருப்பதை போன்று, ட்ரிப்பர் நேவிகேஷனுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படலாம். மறுபக்கம் இந்த பைக்கின் டாப் வேரியண்ட், 2.45 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேரியண்ட், ட்யூயல் டோன் பெயிண்ட் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேரியண்ட்டில், முழு கலர் டிஎஃப்டி திரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக்கில் வழங்கப்படுவதாகும்.

Royal Enfield Guerrilla 450 Side Design

செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் 2 வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின் ஆப்ஷன்தான் கொடுக்கப்படவுள்ளது. அது 452 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். இதன் பவர் அவுட்புட் 40 பிஹெச்பி என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர 17 இன்ச் அலாய் வீல்கள், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் சிங்கிள் பீஸ் சீட் ஆகிய அம்சங்களும், ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வமான தகவல்களும், வரும் ஜூலை 17ம் தேதி நமக்கு தெரியவந்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ட்ரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400) பைக்கிற்கு நேரடி போட்டியாக, ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் இருக்கும். ராயல் என்பீல்டு குரில்லா 450 மூலம் போட்டி அதிகரிக்கவுள்ளதால், ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் விலை சமீபத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டது.

ட்ரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 பைக்கின் விலையை 10 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது. எனவே இந்த 2 பைக்குகளுக்கும் இடையே போட்டி அனல் பறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குரில்லா 450 பைக்கை தொடர்ந்து, ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 14:27 [IST]
English summary
Royal enfield guerrilla 450 variants expected price
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+