ராயல் என்ஃபீல்டில் இரண்டில் எதை சூஸ் பண்றது? ஒரே குழப்பமா இருக்கா? இதை பார்த்துவிட்டு ஒன்றை புக் பண்ணுங்க!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புத்தம் புதிய கேம் சேஞ்சர் பைக்காக குரில்லா 450 (Guerrilla 450) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.39 லட்சம் என்கிற கவர்ச்சிக்கரமான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 450சிசி பைக் ரூ.2.40 லட்சத்தில் என்பது பலரை கவரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. விற்பனையில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு ஹீரா மேவ்ரிக், டிரையம்ப் ஸ்பீடு 400, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 உள்ளிட்ட பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் போட்டியாக உள்ளன.

அதேநேரம், சொந்த ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 பைக்கும் குரில்லா 450 பைக்கின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார்சைக்கிள் தான் குரில்லா 450 ஆகும். இந்த இரு பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

guerrilla 450 vs himalayan 450

வேற்றுமைகள்: ஹிமாலயன் 450 மற்றும் குரில்லா 450 இந்த இரு பைக்குகளுக்கும் வெவ்வேறு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களை ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது. ஹிமாலயன் 450 ஒரு முழு அட்வென்ச்சர் பைக் ஆகும். ஆதலால், அதற்கேற்ப பிரம்மாண்டமானதாக அது வடிவமைக்கப்படுகிறது. அதுவே, குரில்லா ஆனது உருவத்தில் சிறியதாகும். இந்த இரு பைக்குகளும் ஒரே சேசிஸில் தான் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், புதிய குரில்லா 450 பைக்கிற்காக சேசிஸில் சில திருத்தங்களை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஹிமாலயன் 450 பைக்கை காட்டிலும் குரில்லா 450 பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 70மிமீ குறைவாக உள்ளது. ஸ்ட்ரீட் நேக்கட் பைக் என்பதால், புதிய குரில்லா 450 பைக்கில் அதற்கேற்ப சஸ்பென்ஷன் டிராவல்கள் சிறியதாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தரையில் இருந்து இருக்கையின் உயரமும் இந்த பைக்கில் குறைவாக உள்ளது. குரில்லா 450-இல் ரைடர் இருக்கை தரையில் இருந்து 780மிமீ உயரத்திலும், ஹிமாலயன் 450 பைக்கில் 825மிமீ உயரத்திலும் வழங்கப்படுகின்றன.

guerrilla 450 vs himalayan 450

புதிய குரில்லா 450 பைக்கிலும் 17 இன்ச் சக்கரங்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோல் டேங்க் இந்த பைக்கில் சிறியது ஆகும். ஹிமாலயன் 450 பைக்கில் சுமார் 17 லிட்டர்கள் கொள்ளளவில் டேங்க் வழங்கப்பட்டுவரும் நிலையில், புதிய குரில்லாவில் வெறும் 11 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் 450 பைக்கின் முன் சக்கரத்தில் 320மிமீ-இல் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. அதுவே, குரில்லாவில் 310மிமீ மட்டுமே ஆகும்.

ஆனால், டயர்களை ஹிமாலயன் 450 பைக்கை காட்டிலும் புதிய குரில்லா 450 பைக் அளவில் பெரியதாக பெறுகிறது. குரில்லா 450 பைக்கில் 120-பிரிவு டயர் முன் சக்கரத்திலும், 160-பிரிவு டயர் பின் சக்கரத்திலும் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, ஹிமாலயன் 450 பைக்கில் 90-பிரிவு டயர் முன் சக்கரத்திலும், 140-பிரிவு டயர் பின் சக்கரத்திலும் வழங்கப்படுகின்றன. குரில்லா 450 பைக்கின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் அனலாக் தரத்தில் மட்டுமே கிடைக்கும்.

ஒற்றுமைகள்: ஒற்றுமைகள் என்று பார்த்தால், என்ஜின் இவை இரண்டிலும் ஒத்துக்போகக் கூடிய முக்கியமான பாகம் ஆகும். இந்த இரு பைக்குகளிலும் 452சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் இயக்க ஆற்றல்களிலும் இந்த பைக்குகளுக்கு இடையே வித்தியாசம் இல்லை. அதேபோல், என்ஜின் உடன் இணைக்கப்படும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸிலும் வித்தியாசம் இல்லை.

என்ஜின் சிஸ்டத்தில் மிகவும் சிறிய வேறுப்பாடு என்றால், குரில்லா 450 பைக்கில் 45 பற்களை கொண்ட செயின் ஸ்பிராக்கெட் பின் சக்கரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குரில்லா 450 மற்றும் ஹிமாலயன் 450 என இரு பைக்குகளிலும் ரைடு-பை-வயர் டெக்னாலஜி உடன் பெர்ஃபார்மன்ஸ் & ஈக்கோ என இரு ரைட் மோட்களை பெறலாம். ஹிமாலயன் 450 பைக்கில் வழங்கப்படும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடனான வட்ட வடிவிலான டிஎஃப்டி திரையை குரில்லா 450 பைக்கின் டாப் வேரியண்ட்டில் மட்டும் பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 மற்றும் ஹிமாலயன் 450 பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை காட்டிலும் வேற்றுமைகள் தான் அதிகமாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம், தோற்றத்தில் இந்த இரு ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருப்பது ஆகும். அதுமட்டுமின்றி, ஹிமாலயன் 450 ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிள் ஆகும். இத்தகைய பயணங்களுக்கு குரில்லா 450 ஏற்றதாக இருக்காது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 8:00 [IST]
English summary
Royal enfield guerrilla 450 vs himalayan 450 comparison check all details here
மேலும்... #royal enfield #bike comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+