இந்தியாவே வியக்கும் அளவுக்கு ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்... பிரிட்டிஷ் டிசைனர்களுக்கு தோன்றாத ஐடியா!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மார்க்கெட்டில் பிரபலமான ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையிலான ஸ்ட்ரீட் நேக்கட் (Street Naked) பைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.2.39 லட்சம் என்கிற கவர்ச்சிக்கரமான விலையில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 பைக்குகள் போட்டியாக உள்ளன.
இதில் டிரையம்ப் ஸ்பீடு 400 ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆதலால், அதுவும் மாடர்ன் தரத்திலான பைக் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தோற்றம்: டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் இந்தியாவில் உருவாக்கப்பட்டாலும், தோற்றத்தில் இது பக்கா பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது. மறுப்பக்கம், புதிய குரில்லா 450 பைக் ஆனது ஹிமாலயன் 450 என்கிற இந்தியன் அட்வென்ச்சர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதேபோன்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது. டிரையம்பின் விலை குறைவான பைக் என்பதால் ஸ்பீடு 400-இன் பெயிண்ட் எளிமையானதாக கொடுக்கப்படுகிறது. குரில்லா ஆனது இருப்பதிலேயே கவர்ச்சிக்கரமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் போன்று பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
பரிணாம அளவுகள்: புதிய குரில்லா 450 பைக்கின் உயரம் 1125மிமீ ஆகும். ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் இது 41மிமீ அதிகமாகும். அதேபோல், அகலத்திலும் 19மிமீ கூடுதல் அகலமானதாக குரில்லா 450 விளங்குகிறது. ஆனால், குரில்லா 450 பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரம் 780மிமீ. ஸ்பீடு 400 இதனை காட்டிலும் 10மிமீ கூடுதல் உயரத்தில் இருக்கையை கொண்டுள்ளது. குரில்லா 450 பைக்கின் முன் & பின் சக்கரங்கள் நன்கு இடைவெளியுடன் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் கொள்ளளவில் ஸ்பீடு 400 பைக் 2 லிட்டர்கள் அதிகமானதாக உள்ளது.

என்ஜின்: புதிய குரில்லா 450 பைக்கில் 452சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், DOHC, 4-வால்வு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 39.7 பிஎச்பி மற்றும் 40 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம், டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் பொருத்தப்படும் 398.15சிசி, லிக்யுடு-கூல்டு, DOHC, 4-வால்வு என்ஜின் ஆனது 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
சஸ்பென்ஷன் & பிரேக்குகள்: குரில்லாவில் 43மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், ஸ்பீடு 400 பைக்கில் அதே 43மிமீ-இல் தலைக்கீழான பிக் பிஸ்டன் ஃபோர்க்கும் முன்பக்க சஸ்பென்ஷனுக்காக வழங்கப்படுகின்றன. பின்பக்க சஸ்பென்ஷனுக்கு குரில்லா 450-இல் லிங்கேஜ் டைப் மோனோஷாக்கும், ஸ்பீடு 400-இல் கேஸ் மோனோஷாக்கும் உள்ளது. குரில்லா பைக்கில் முன் டிஸ்க் பிரேக் 310மிமீ-லும், பின் டிஸ்க் பிரேக் 270மிமீ-லும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீடு 400-இல் 300மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், 230மிமீ-இல் டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்: குரில்லா 450 பைக்கில் கூகுள் மேப் வசதியை பெறலாம். இதற்காக வட்ட வடிவில் 4-இன்ச் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. செக்மெண்ட்டில் வேறெந்த பைக்கிலும் இந்த வசதி இல்லை. ஸ்பீடு 400 பைக்கில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கூட இல்லை. குரில்லா பைக்கில் போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் 2 ரைட் மோட்கள் உள்ளன. ரைட் மோட்களை ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டிருக்கும் ஜாய்ஸ்டிக் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம். குரில்லா பைக்கில் விலை குறைவான வேரியண்ட்களில் கூட செமி-டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
விலைகள்: புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கின் விலை ரூ.2.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.29 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை காட்டிலும், ராயல் என்ஃபீல்டு அதிக எண்ணிக்கையில் டீலர்ஷிப் ஷோரூம்களை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 ஆனது 450சிசி பைக், ஆனால் ஸ்பீடு 400 ஒரு 400சிசி பைக். முதலில், இந்த விஷயத்திலேயே குரில்லாவின் கை ஓங்குகிறது. ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் வெறும் ரூ.10,000 மட்டுமே குரில்லா 450 பைக்கின் விலை அதிகமாக இருப்பது நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கும் மேட்-இன்-இந்தியா பைக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படுவதால், ஸ்பீடு 400 பைக்கையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.


Click it and Unblock the Notifications









