30.8 கி.மீ மைலேஜ் தரும் ஹிமாலயன் 450 பைக்! ராயல் என்ஃபீல்டுல இப்படி ஒரு பைக்கா? ஆச்சரியமா இருக்குதே!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இதனால் தான் அந்த பைக் விற்பனையாகும் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் பைக்காக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 என்ற பைக்கின் மைலேஜ் குறித்த தகவல்களை தான் இங்கே காணப் போகிறோம்
ராயல் என்ஃபீல்டு பைக் என்றாலே பவர்ஃபுல் இன்ஜின் கொண்ட பைக்குகளாக இருக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. அதன்படி தரமான தயாரிப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் பைக்கில் உள்ள செக்மெண்டில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தான் சிறப்பாக விற்பனையாகும் பைக்குகளாக உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் 450 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது.

இந்த ஹிமாலயன் 450 பைக் ஆஃப்ரோடிங் அம்சங்கள் நிறைந்த பைக்காக இருக்கிறது. முக்கியமாக பாறைகள், கரடு முரடான சாலைகள், பாதையே இல்லாத இடங்களில் எல்லாம் இந்த பைக்கில் ஓட்டி செல்ல பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்த பைக்கை நீங்கள் வாங்கும் மனநிலையில் இருந்தால் உங்களுக்கு இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் மற்றும் இதன் மைலேஜ் குறித்த விபரங்களை சொல்ல வேண்டியது எங்கள் கடமையாக உள்ளது
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை பொறுத்தவரை லிக்யூட் கூல்ட் 452 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக இருக்கிறது இது 40 பிஎச்பி பவரை 8000 ஆர்பிஎம்மிலும் 40 என்எம் டார்க் திறணை 5000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக குறைந்த எடை கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக்கின் இன்ஜின் வெறும் பத்து கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட இன்ஜினாக இருக்கிறது. 4000 ஆர்பிஎம் வரை இந்த பைக்கின் செயல்பாடு என்பது மெதுவாக தான் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு மெதுவாக பிக்கப்பாகி பைக் வேகமாக செல்கிறது.
இந்த பைக்கின் மைலேஜ் சோதனையை பைக்வாலே நிறுவனம் செய்து பார்த்தது. அந்த சோதனையின் போது இந்த பைக் ஒட்டுமொத்தமாக 30.85 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது அந்நிறுவனம் அனைத்து விதமான கண்டிஷன்களிலும் இந்த பைக்கை ஓட்டி பார்த்தது முக்கியமாக சிட்டிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஓட்டி பார்த்தது அதன் முடிவையே தற்போது அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த பைக்கின் முழு டேங்க் கொள்ளளவு என்பது 17 லிட்டராக இருக்கிறது. முழு டேங்க் பெட்ரோல் அடித்து பயணித்தால் இந்த பைக் சராசரியாக 520 கிலோமீட்டர் வரை பயணிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக பைக் வாங்குபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ள தகவலாக இருக்கும். நீங்கள் இந்த பைக்கை வாங்க நினைத்தால் இந்த மைலேஜ் குறித்த கணக்கீடுகளை இதை வைத்து செய்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த பைக்கில் முக்கிய அம்சங்களாக 4 இன்ச் கொண்ட வட்ட வடிவிலான டிஎஃப்டி டேஷ்போர்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனுடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்ய முடியும். மேலும் கூகுள் மேப் நேவிகேஷன் இதில் கிடைக்கிறது. இதன் மூலம் டேஷ்போர்டு மூலம் தகவலை பெற முடியும்.
மேலும் நீங்கள் மியூசிக் கண்ட்ரோலை இதில் உள்ள ஜாய்ஸ்டிக் மூலம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹிமாலயன் பைக் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ரைடு பை ஒயர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட பைக் ஆகும். இதில் இரண்டு விதமான ரைடு மோடுகள் உள்ளன. எக்கோ மட்டும் பெர்பார்மென்ஸ்.
இதற்கு முன்பு உள்ள பைக்கை போல இந்த பைக்கிலும் முன் பக்கம் 21 இன்ச்சிலும் பின்பக்கம் 17 இன்ச்சிலும் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இருக்கிறது. இதை ஆப் செய்யும் வசதியும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 பைக் கடந்தாண்டு அறிமுகமானாலும் இதன் மைலேஜ் குறித்த கவலை பலருக்கும் இருக்கிறது. இந்த பைக்கை வாங்க நினைக்கும் பலர் இதன் மைலேஜ் எப்படி இருக்கும் என யோசித்து வந்தனர். அவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் இப்பொது இந்த மைலேஜ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது அவர்களை சந்தோஷ படுத்தியுள்ளது.
Source:Bikewale


Click it and Unblock the Notifications









