தலைமுறை தலைமுறையாக உழைக்கும் பைக்கை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு! காடு, மலை எதுவா இருந்தாலும் சமாளிச்சிரும்!

தலைமுறை தலைமுறையாக உழைப்பதில் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் டூ-வீலர்கள் பெயர்போனவையாக இருக்கின்றன. இதற்கு சான்றாக இப்போதும் நம்முடைய தாத்தா காலத்து ராயல் என்பீல்டு பைக்குகள் சாலையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் காலத்துக்கும் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட ஓர் வாகனத்தை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் (Himalayan) பைக் மாடலின் மின்சார வெர்ஷன் (Electric Version)-னையே வெளியீடு செய்திருக்கின்றது.

இத்தாலியில் உள்ள மிலன்-இல் 2024 இஐசிஎம்ஏ (EICMA 2024) வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன ஷோ வாயிலாகவே ராயல் என்பீல்டு அதன் ஹிமாலயன் எலெக்ட்ரிக் 2.0 (Himalayan Electric 2.0) பைக் மாடலை காட்சிப்படுத்தி இருக்கின்றது.

Royal enfield himalayan electric bike unveiled

அழிவில்லா வாகனங்களாக மின்சார வாகனங்கள் அறியப்படுகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக, அதன் எஞ்சின் பாழாகத வரை மட்டுமே அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேவேளையில், இதன் ஆயுட்காலம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மாசு வெளிப்பாடு தன்மையும் அதிகரிக்கும்.

இதனால்தான், கட்டாயமாக குறிப்பிட்ட ஆயுட்காலத்திற்கு பின்னர் அவற்றை கை கழுவியே ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளது. ஆனால், மின்சார வாகனங்கள் அப்படி அல்ல. அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால்தான் இவற்றை அழிவில்லா வாகனங்கள் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, பேட்டரியின் ஆயுட்காலத்திற்கு அவற்றை மாற்றிவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் வைத்து இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய வாகனமாகவே ஹிமாலயன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்சர் இரண்டு சக்கர வாகன காதலர்களை கவரும் விதமாக அமைந்திருக்கின்றது.

இப்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் ஐசிஇ வெர்ஷனைக் காட்டிலும் மிகவும் முரட்டுத் தனமான லுக்கில் மின்சார வெர்ஷன் ஹிமாலயன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இதன் கவர்ச்சியான தோற்றத்திற்காக விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களை ஹிமாலயன் ஐசிஇ-யிலும் பார்க்க முடியும்.

இந்த வாகனம் பற்றிய எந்வொரு முக்கிய தகவல்களையும் ராயல் என்பீல்டு இதுவரை வெளியிடவில்லை. விரைவில் நிறுவனம் அனைத்து முக்கிய தகவல்களையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ராயல் என்பீல்டு இன்னும் இரண்டு மின்சார பைக்குகளையும் இஐசிஎம்ஏ 2024 வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி வெளியீடு செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

நிறுவனத்தின் ஃப்ளையிங் ஃபியா-வை தழுவி உருவாக்கப்பட்ட ஃப்ளையிங் ஃபியா சி6 (Flying Flea C6) மற்றும் ஃப்ளையிங் ஃபியா எஸ்6 (Flying Flea S6) ஆகிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவது ராயல் என்பீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் 2.0-வையும் வெளியீடு செய்துள்ளது.

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனமாக இதனை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. கரடு-முரடான சாலைகளை சமாளிக்கும் திறன் கொண்ட டயர், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய ஸ்விங்கார்ம் உள்ளிட்டவற்றை இந்த பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது. மேலும், இதனை லாங் டிராவலுக்கு ஏற்ற வாகனமாகவும் தயார் செய்திருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் ஓலா எலெக்ட்ரி, ஏத்தர் எனெர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களே முக்கிய பங்களிப்பாளர்களாக இருக்கின்றனர். இவர்களின் வரிசையில் விரைவில் ராயல் என்பீல்டும் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 15:18 [IST]
English summary
Royal enfield himalayan electric 2 0 unveiled in 2024 eicma key upgrades for electric adventure
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+