ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வச்சிருக்கீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இந்த பைக்கின் வடிவமைப்பு மற்றும் இதில் உள்ள அம்சங்கள் தான். இதனால் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் தினமும் இந்த பைக்கை வாங்கி வரும் நிலையில், இன்று வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக முக்கியமாக இருக்கும் பேச்சு இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் பற்றி தான். பலர் இதை மாடிஃபிகேஷன் செய்ய விரும்பி வருகிறார்கள். இது பற்றிய ஒரு வீடியோவை தான் நாம் இங்கே நாம் காணப்போகிறோம்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்கில் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் தான் இருக்கிறது. ஆனால் பல யூஎஸ்டி சஸ்பென்ஷனை விரும்புகிறார்கள். இதனால் பலர் வெளிமார்க்கெட்டில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை மாற்றி யுஎஸ்டி சஸ்பென்ஷனை பொருத்துகிறார்கள். இதை பெங்களூர்வை சேர்ந்த என்எம்டபிள்யூ நிறுவனமும் வழங்குகிறது. இது குறித்த விரிவான வீடியோவை கீழே காணலாம்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை பொறுத்தவரை ஆஃப் ரோடு அம்சத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படும் பைக்காகவும் ஏற்படும் போது, டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை விட யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் சிறப்பாக செயல்படும். இதன் காரணமாகவே பலர் இந்த யுஎஸ்டி ஃபோர்க்கை மாற்ற விரும்புகிறார்கள். இவர்களுக்காக பெங்களூருவை சேர்ந்த என்எம்டபிள்யூ நிறுவனம் இதை வழங்கி வருகிறது.

இந்த யுஎஸ்டி ஃபோர்க்கில் ரீபவுண்டு மற்றும் ஃப்ரீ லோட் அட்ஜெஸ்ட்மென்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 15 புள்ளிகள் வரை இதில் அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 75,000 என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








