விலை குறைவான பைக்கை களமிறக்க போகும் ராயல் என்பீல்டு... போட்டி நிறுவனங்களின் ஷோரூம் காத்து வாங்க போகுது...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இதன் 450 சிசி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் 2வது காலாண்டில், அதாவது மே மாததத்திற்கு பிறகு டிசம்பர் மாதத்திற்குள், ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது 452 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டட், டிஓஹெச்சி இன்ஜின் ஆகும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40.02 பிஎஸ் பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதே பவர் அவுட்புட்டை ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக்கிலும் நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக களமிறக்கவுள்ள மிகப்பெரிய பைக் இதுவாகும். எனவே ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக் மீது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம். அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூடெண்ட் கன்சோல், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்விட்டசபிள் ஏபிஎஸ் மற்றும் ரைடிங் மோடுகள் உள்ளிட்ட வசதிகளை எல்லாம் ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிசைனை பொறுத்தவரையில், கண்ணீர் துளி வடிவ எரிபொருள் டேங்க், சிங்கிள் பீஸ் இருக்கை, வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும். ட்ரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400), ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளின் 401 (Husqvarna Svartpilen 401) உள்ளிட்ட பைக்குகள் உடன், ராயல் என்பீல்டு ஹண்டர்450 போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இதைக்காட்டிலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 450 பைக்கின் விலை அதிகமாக இருக்கும். இருந்தாலும் கூட இதுவும் விலை குறைவான 450 சிசி பைக்குகளில் ஒன்றாகவே இருக்கும் என கருதப்படுகிறது. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு 450 சிசி பைக்கை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








