ராயல் என்பீல்டு பைக்கை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! இந்த வீடியோவை பாருங்க... உங்க பைக்கையும் மாற்ற ஆசை வரும்

ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 (Royal Enfield Interceptor 650) பைக் ஒன்று பெங்களூருவில் உள்ள என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் (NMW Performance Racing) மையத்தில் 865சிசி பைக்காக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், அந்த இண்டர்செப்டர் 865 பைக்கின் செயின் ஸ்பிராக்கெட்டை 16 பற்கள் கொண்டதாக மாடிஃபிகேஷன் செய்துள்ளனர்.

அதாவது, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650 பைக்கில் வழங்கும் 14 பற்களை கொண்ட ஸ்பிராக்கெட்டை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 16 பற்களை கொண்ட ஸ்பிராக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன் பணிகளை பெங்களூருவில் என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் மையத்தில் எவ்வாறு மேற்கொள்கின்றனர் என்பதை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். அதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.

அனைத்து பைக்குகளிலும் 2 ஸ்பிராக்கெட்கள் இருப்பது வழக்கம். ஒன்று, என்ஜின் சிஸ்டத்தில் இருக்கும். மற்றொன்று பின் சக்கரத்தில் இருக்கும். பின்பக்க ஸ்பிராக்கெட்டை சிறியது ஆக்குவது மூலம் பைக்கின் ஆக்ஸலரேஷன் அதிகமாகும். அதேநேரம், முன்பக்க ஸ்பிராக்கெட்டை பெரியதாக்குவதன் மூலமும் பைக்கில் அதிக ஆக்ஸலரேஷனை கொடுக்க முடியும். அதாவது, முன்பக்க ஸ்பிராக்கெட்டை பெரியதாக்கும்போது, ஆட்டோமேட்டிக்காக பின்பக்க ஸ்பிராக்கெட் சிறியதாகிறது.

royal enfield interceptor sprocket modification

முன்பக்க ஸ்பிராக்கெட்டை பெரியதாக்குவதினால், பைக்கின் டார்க் திறனும் அதிகரிக்கும். பைக் ரேஸர்கள் & ஸ்டண்டர்கள் தங்களது ரேஸ் பைக்கில் அதிக ஆக்ஸலரேஷனை பெற இவ்வாறுதான் செய்வர். பின்பக்க ஸ்பிராக்கெட்டின் பற்களின் எண்ணிக்கையை குறைக்க பைக்கில் நிறைய மாடிஃபிகேஷன்களை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், முன்பக்க ஸ்பிராக்கெட்டை பெரியதாக மாற்ற அந்த அளவிற்கு நிறைய வேலைகள் இருக்காது. இதனை, என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் மையம் சிறப்பாக செய்து கொடுக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 22:44 [IST]
English summary
Royal enfield interceptor 650 sprocket modification at nmw performance racing detailing video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+