எல்லாரும் வாங்க போட்டி போட போகும் ராயல் என்ஃபீல்டு பைக்!! மார்க்கெட்டில் கண்டிப்பா ஹிட்டு தான்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) அடுத்ததாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய சில 650சிசி பைக்குகளின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. அவற்றுள் ஒன்றின் படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. விரைவில் இத்தாலியில் நடைபெறவுள்ள EICMA 2024 கண்காட்சியில் இந்த ராயல் என்ஃபீல்டு பைக் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் இந்த பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புதிய 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னையில் தொழிற்சாலை அமைத்து இந்திய பைக் நிறுவனமாக செயல்படும் ராயல் என்ஃபீல்டுக்கு உலகளவில் கஸ்டமர்கள் உள்ளனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் போட்டியாக விளங்குகின்றன. அவற்றை காட்டிலும் ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

royal enfield interceptor bear 650

இது ராயல் என்ஃபீல்டுக்கு பெரிய அனுகூலமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த நிறுவனத்தின் 650சிசி பைக்குகளுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால்தான், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகாவிடினும் புது புது 650சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு தொடர்ச்சியாக உருவாக்குகிறது. இந்த வகையில் அடுத்ததாக இத்தாலியில் நடைபெறவுள்ள 2024 EICMA கண்காட்சியில் தனது புதிய 650சிசி பைக்கை ராயல் என்ஃபீல்டு உலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெறவுள்ள 2024 EICMA கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ள புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கின் பெயர் இண்டர்செப்டர் பியர் 650 (Interceptor Bear 650) என சூட்டப்படலாம். அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் புதிய மாடலாக இண்டர்செப்டர் பியர் 650 விளங்கவுள்ளது; தோற்றத்தில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக இருக்கும்.

royal enfield interceptor bear 650

ராயல் என்ஃபீல்டில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் இண்டர்செப்டர் பியர் 650 பைக்கை சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது பொது வெளியில் பார்த்திருந்தோம். அதாவது, அந்த சோதனை ஓட்டங்களின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. அவற்றில் எல்லாம் பைக் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் பியர் 650 பைக் தெளிவாக காட்சியளித்துள்ளது. இந்த படங்களில் பைக்கை பார்க்கும்போது உங்களுக்கு இண்டர்செப்டர் 650 பைக் ஞாபகத்திற்கு வரலாம். ஏனெனில், இண்டர்செப்டர் 650 பைக்கை உருவாக்க பயன்படுத்திய அதே பிளாட்ஃபாரத்தில்தான் இந்த பியர் 650 பைக்கையும் ராயல் என்ஃபீல்டு உருவாக்கியுள்ளது.

royal enfield interceptor bear 650

ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுக்கு உண்டான ஸ்டான்ஸ் இந்த பைக்கில் கிடைக்கும். பைக்கிற்கு முன்பக்கத்தில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப், மெல்லியதான பெட்ரோல் டேங்க், ட்யூப்லர் கிராப் ரெயில் உள்ளிட்டவற்றுடன் குறைவான பாடி பேனல்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கின் பளபளப்பிற்கு ஏற்ப பின்பக்க டெயில்லேம்ப்பை சுற்றியும் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து தனியாக எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை பெரும்பாலும் எல்லா ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளிலும் காணலாம். அவற்றுள் இல்லாத ஒன்று, பியர் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது என்றால், அது எக்ஸாஸ்ட் குழாய் ஆகும். மற்ற ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளில் டபுள் சைலன்சர் குழாய்கள் வருகின்றன. ஆனால், பியர் 650 பைக்கில் ஒன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், பைக் காம்பெக்ட்டான உடலமைப்பிற்கு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்றப்படி இந்த பைக்கிலும் வழக்கமான 648சிசி என்ஜின் தான் பொருத்தப்படும். ஒரே மாதிரியான என்ஜின் உடன் பல்வேறு விதமான பைக்குகளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் இல்லாவிடினும் வெளிநாடுகளில் புதிய இண்டர்செப்டர் பியர் 650 பைக் நல்ல வரவேற்பை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 19:23 [IST]
English summary
Royal enfield interceptor bear 650 images leaked check all details here
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X