இத்தாலியில் நடைபெற்ற வாகன கண்காட்சியை தெறிக்கவிட்ட சென்னை நிறுவனம்.. ஒவ்வொன்னும் அல்டிமேட்!

உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளில் ஒன்றான இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024) இத்தாலியில் உள்ள மிலன்-இல் சமீபத்தில் தொடங்கியது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் வருங்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். அந்தவகையில், தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் இத்தாலியில் நடைபெற்ற இந்த வாகன கண்காட்சியை தெறிக்க விட செய்யும் வகையில் புதுமுக இரண்டு சக்கர வாகன மாடல்கள் சிலவற்றை காட்சிப்படுத்தியது.

இந்த காட்சிப்படுத்தலில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடல்களும் அடங்கும். இதுதவிர இன்னும் சில இரண்டு சக்கர வாகனங்களையும் இந்த நிறுவனம் அங்கு வைத்து அறிமுகப்படுத்தியது. அவை என்னென்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Royal enfield eicma 2024

ஃப்ளையிங் ஃப்ளியா (Flying Flea): இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார பைக் மாடல் ஆகம். ஃப்ளையிங் ஃப்ளியா சி6 மற்றும் ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 என்கிற இரண்டு மாடல்களை இந்த பெயரில் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இரண்டையும் சீக்கிரமே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்குகளை வேர்ல்டு வார் இரண்டில் பயன்படுத்தப்பட்ட ஃப்ளையிங் ஃப்ளியா மோட்டார்சைக்கிளை தழுவியே ராயல் என்பீல்டு வடிவமைத்திருக்கின்றது.

இதில் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 என்பது கிளாசிக் வகை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 என்பது ஸ்கிராம்ப்ளர் வகை எளெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும். இந்த இரண்டும் அடுத்தடுத்து என ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் (Electric Himalayan): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அட்வென்சர் (ADV) பயன்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஹிமாலயன்-ம் ஒன்றாகும். இந்த பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே ராயல் என்பீல்டு இஐசிஎம்ஏ 2024-இன் இரண்டாவது நாளில் வெளியீடு செய்தது.

இப்போது விற்பனையில் இருக்கும் ஐசிஇ வெர்ஷனைக் காட்டிலும் மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்டதாகவே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், லாங் டிராவல் மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்காக இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த வாகனம் பற்றிய எந்தவொரு முக்கிய தகவலையும் ராயல் என்பீல்டு வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

650 சிசி மோட்டார்சைக்கிள்கள்: இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடைத்தைப் பிடித்திருக்கும் பைக் மாடல்களில் ஒன்றாக கிளாசிக் 350 மாடலின் 650 சிசி வெர்ஷன் உள்ளது. இதனையே ராயல் என்பீல்டு நிறுவனம் இஐசிஎம்ஏ 2024-இல் வைத்து காட்சிப்படுத்தியது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே இந்த பைக்கை அவர்கள் வாகன ஷோவில் வைத்து காட்சிப்படுத்தினர்.

எனவே உலக அளவில் சீக்கிரமே இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றுமொரு 650 சிசி பைக்காக பியர் 650 உள்ளது. இந்த பைக்கை அவர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டனர். இது ஓர் ஸ்கிராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த வாகனத்தை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர்.

3.39 லட்சம் ரூபாயே இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் மாடல்களுடன் சேர்த்து ஐகான் மோட்டார்ஸ்போர்ட்ஸ் (ICON Motorsports) நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஷாட்கன் 650 பைக்கையும் ராயல் என்பீல்டு இந்த உலக மேடையை பயன்படுத்தி அறிமுகப்படுத்தியது.

மேலும், இந்த பைக் மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைச் செய்யவும் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதன் சிறப்புகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், படங்களை வைத்து பார்க்கையில் வழக்கமான 650 ஷாட்கன்னைக் காட்டிலும் இது அதிக கவர்ச்சியானதாக இருக்கும் என்பது மட்டும் தெரிகின்றது.

எல் சால்சரியோ ப்ரோமதியோ கான்செப்ட் (El Solitario Prometeo concept): இதுவும் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும். ஸ்டுடியோ வால்டிமியர் எனும் நிறுவனத்துடன் இணைந்தே வாகனத்தை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். முற்றிலும் தனித்துவமான தோற்றம் இந்த இணைவின் வாயிலாக இந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 2024 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் பலரின் கவனத்தை ஈர்க்க கூடியதாக இந்த வாகனம் அமைந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து வாகனங்களையும் இந்த வாகன ஷோ-வில் காட்சிப்படுத்தி ஒட்டுமொத்த அரங்கையும் ராயல் என்பீல்டு தெறிக்க விட்டு இருக்கின்றது என்றே கூறலாம். மேலும், இந்த வாகனங்கள் வாயிலாக ஒட்டுமொத்த வாகன உலகையும், வாகன ஆர்வலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றது, இந்த தமிழ்நாட்டு நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 10, 2024, 5:00 [IST]
English summary
Royal enfield introduced its electric motorcycle brand and new 650 models at eicma 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+