இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் சமீபத்தில் அதன் ஷாட்கன் 650 (Shotgun 650) பைக் மாடலை வட அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியர்களின் மனம் கவர்ந்த 650 சிசி பைக்குகளில் ஒன்றே இந்த பைக் மாடல் ஆகும். இந்த பைக்கைக் கொண்டு இந்தியர்களைக் கவர்ந்தநிலையிலேயே வட அமெரிக்கர்களையும் வளைத்துப்போடும் பொருட்டு ஷாட்கன் 650 அந்த சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றுமொரு தன்னுடைய சூப்பரான தயாரிப்பை வேறொரு வெளிநாட்டில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாக புல்லட் 350 (Bullet 350) காட்சியளிக்கின்றது. இந்த பைக் மாடலையே நிறுவனம் வெளிநாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Royal enfield bullet 350 military silver black

ஜப்பானிலேயே அந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஜப்பானில் கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே அதன் வர்த்தக பணிகளைத் தொடங்கியது. இங்கு மிக சிறப்பனா வரவேற்பை ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதனால்தான் இந்த சந்தையை மேலும் சிறப்பிக்கும் விதமாக தற்போது புல்லட் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜப்பான் நாட்டில் புல்லட் 350 பைக் 6.94 லட்சம் யென்கள் தொடங்கி 7.01 லட்சம் யென்கள் வரையிலான விலையில் அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 லட்சம் தொடங்கி ரூ. 3.86 லட்சம் வரையிலான விலையில் இந்த பைக் ஜப்பானில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் இதே பைக் 1.73 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேட் இன் இந்தியா தயாரிப்பாகவே ஜப்பானுக்கு இந்த பைக் மாடல் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இதில் 350 சிசி ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

கிளாசிக் 350 பைக்கை தயாரிக்க பயன்படுத்தும் அதே பிளாட்பாரமே புல்லட் 350 பைக் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டு பைக் மாடல்களும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. அதேவேளையில், தனித்துவமான ஸ்டைல் கொண்ட ஹேண்டில்பார், ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை ஆகியவற்றால் புல்லட் 350 அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

இத்துடன், மாறுபட்ட நிற தேர்வு ஆகியவை புல்லட் 350இல் வழங்கப்படுகின்றது. சமீபத்திலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் ஜப்பான் சந்தையில் அதன் ஹிமாலயன் 411 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 452 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் கொண்ட பைக் ஆகும்.

இதனால் 39.4 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இந்த பைக்கில் அதி நவீன அம்சங்கள் தாங்கியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் திரை, ரைடு-பை ஒயர் டெக்னாலஜி, டூயல் சேனல் ஏபிஎஸ், எல்இடி லைட்டுகள், ப்ளூடூத் இணைப்பு மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் அம்சம் கொண்ட இருக்கை ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புல்லட் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜப்பானில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியர்களின் மனதைக் கவர்ந்ததைப் போலவே ஜப்பானியர்களும் மனதையும் இந்த பைக் மாடல் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 21:49 [IST]
English summary
Royal enfield introduced the bullet 350 bike in japan following the himalayan bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+