தமிழ்நாட்டுல வாங்கின ராயல் என்பீல்டு பைக்குக்கு வெளிநாட்டுல வாரண்டி கிளைம் பண்ணிக்கலாம்.. வேற லெவல் திட்டம்!
இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக அளவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நடிகர்கள் அஜித், விஜய்க்கு இருப்பதைப் போல மிகப் பெரிய மற்றும் தீவிர ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நிறுவனமாக ராயல் என்பீல்டு காட்சியளிக்கின்றது. இந்த பிராண்டே தன்னுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஓர் சூப்பரான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. 'பார்டர்லெஸ் வாரண்டி புரோக்கிராம்' (Borderless Warranty Program) எனும் திட்டத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. எல்லையே இல்லா வாரண்டி திட்டம் என்பதே இதன் பொருள் ஆகும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமும் எல்லையில்லா வாரண்டி திட்டத்தை வழங்குவதுதான். அதாவது, தமிழகத்தில் வாங்கிய ராயல் என்பீல்டு பைக்கை உலகின் எந்த மூலையிலும் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தில் வைத்து சர்வீஸ் செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமல்ல வாரண்டியின்கீழ் பழுதுபட்ட பாகத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

இத்தகைய ஓர் சூப்பரான வாரண்டி திட்டத்தையே ராயல் என்பீல்டு அதன் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த திட்டம் அதன் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் 70 நாடுகளை உள்ளடக்கியே இந்த திட்டத்தை அது அறிவித்து இருக்கின்றது.
நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் எந்த நாட்டின் ராயல் என்பீல்டு பைக்கையும் கொண்டு சென்று சர்வீஸ் மற்றும் வாரண்டியை கிளைம் செய்துக் கொள்ள முடியும். ஆனால், நிறுவனத்தின் இந்த புதிய எல்லையில்லா வாரண்டி திட்டத்தின்கீழ் வாகனம் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.

இந்த திட்டத்தின்கீழ் வாங்கியிருந்தால் மட்டுமே உலகின் எந்த மூலையிலும் பைக்கை சர்வீஸ் மற்றும் வாரண்டியை கிளைம் செய்துக் கொள்ள முடியும். உதாரணமாக, தமிழகத்தில் நீங்கள் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியிருப்பீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த பைக்கைக் கொண்டு உலக அளவிலான சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றீர்கள் எனில், அந்த நேரத்தில், ஏதேனும் கோளாறு அல்லது மிகப் பெரிய பழுது பைக்கில் ஏற்பட்டால், அந்த பழுதான பாகத்தை வாரண்டியின்கீழ் சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இத்தகைய சூப்பரான திட்டத்தையே ராயல் என்பீல்டு தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. இது அதன் உலகம் சுற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் பலர் நேபாளம் போன்ற அண்டை நாடுகளுக்கு பைக்குகளிலேயே பயணித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த மாதிரியான நபர்களுக்கு ராயல் என்பீல்டின் புதிய திட்டம் பெரும் உதவியாக இருக்கும். மேலும், ஒரு சிலர் கடல் கடந்தும் பயணித்தும் வருகின்றனர். அவர்களுக்கும் இந்த திட்டம் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், நிறுவனத்தின் முக்கிய நிபந்தனையான, புதிய எல்லையில்லா வாரண்டி திட்டத்தின்கீழ் அந்த வாகனம் வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும், நிறுவனத்தின் பட்டியலிட்டு இருக்கும் 70 நாடுகளிலேயே நம்மால் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும். மேலும், குறிப்பிட்ட அந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளூரில் உள்ள அதிகாரப்பூர்வ சேவை மையத்தில் குறிப்பிட்ட கால பராமரிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் நிறுவனம் முன் வைத்துள்ளது.
அதேவேளையில், பிற நாடுகளில் இருந்து தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்த உத்தரவாதத் திட்டம் பொருந்தாது என்று நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. அதிகமான ராயல் என்பீல்டு பயனர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த பயணத்தை சுவாரஷ்யமான மற்றும் தடையில்லாததாக மாற்றும் பொருட்டே ராயல் என்பீல்டு இந்த முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்து, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்த புதிய உத்தரவாத திட்டமானது, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்குகளை எல்லைகளைத் தாண்டி எடுத்துச் செல்லும்போது, தேவையற்ற மன உலைச்சலுக்கு ஆளாகமல், சிறந்து பயண அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே கொண்டு வரப்பட்டு உள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சேவை அல்லது உத்தரவாத கிளைம்களுக்கான கோரிக்கைகளை ராயல் என்ஃபீல்டு எவ்வாறு நிர்வகிக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு ராயல் என்பீல்டு பைக்கைக் கொண்டு உலகை சுற்றி வருபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது அப்பைக்கின் விற்பனையை மேலும் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








