90ஸ் கிட்ஸ் கோவா போக டைம் வந்துடுச்சு! 22ம் தேதி நடக்கப்போகும் மரண மாஸ் சம்பவம்

இந்த 2024ம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் என்ற நிகழ்ச்சியை கோவாவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு புதிய மாடல்கள் அப்டேட்டுகள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகன உபகரணங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மோட்டோவெர்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஐந்து விதமான பெயர்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மோட்டோ சோனிக், மோட்டோ வில்லே, மோட்டோஷாப், மோட்டோ ரீல் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது.

royal enfield motoverse 2024

இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பைக் ரைடர்கள் கோவாவிற்கு வர இருக்கிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் பைக் ரைடிங் அனுபவம் மற்றும் தங்கள் சந்தித்த பல்வேறு சவால்கள் குறித்து மக்களுடன் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அட்வெஞ்சரான பல்வேறு நிகழ்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக டிர்ட் டிராக் ரேஸ் நடத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் ரைடிங் திறமையை ஸ்லைடிங் மூலம் காண்பிப்பதற்கான டிராக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதில் புதிதாக பைக் ரைடிங் செய்பவர்கள் அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பு இங்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இது நிகழ்ச்சியில் பரபரப்பான மியூசிக், மோட்டார் சைக்கிள் ஆக்ஷன் உள்ளிட்ட பல்வேறு துடிப்பான நிகழ்வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

royal enfield motoverse 2024

ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் தற்போது தங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களது சில முக்கிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது. அதன்படி ஹண்டர், கிளாசிக், ஹிமாலயன், கொரில்லா, இன்டெர்செப்டர், கான்டினென்டல் ஜிடி, மற்றும் ஷார்ட்கன் ஆகிய வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய பைக்குகளான இன்டர்செப்டர் பியர் 650 மற்றும் கிளாசிக் 650 ஆகிய பைக்குகளையும் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பைக்கில் எல்லாம் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்த்த பைக்குகளாக உள்ளன.

royal enfield motoverse 2024

ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கை பொறுத்தவரை நிறுவனத்தின் 650 சிசி ரகத்தில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்டெர்செப்டர் 650 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பு பல இந்த பைக்கிலும் இடம்பெறுகின்றன. அதே நேரம் ஸ்கிரம்லர் லுக்கிலும் இந்த பைக் வடிவமைக்கப்படுகிறது.

மேலும் இந்த பைக்கில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், சிறிய பெட்ரோல் டேங்க், ஒரே பீஸ் கொண்ட சீட், டியூப்ளர் கிராபரில் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறுகின்றன. இது இந்த பைக்குக்கு சிறப்பான லுக்கை கொடுக்கிறது. மேலும் இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இடம்பெறுகிறது. முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட போர்க்குகளும் பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கை பொறுத்தவரை ராயல் கிளாசிக் 350 பைக்கில் இன்டர்செப்டர் 650 பைக்கில் உள்ள அதே 647.95சிசி இன்லைன் இன்ஜினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இன்ஜின் பவர் இல்லம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு பைக் மீதும் மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பலர் பைக் ரைடிங் மூலமாகவே கோவாவிற்கு செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் தற்போது தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கக்கூடும். இந்த நிகழ்ச்சி பலரை ஈர்க்கும் விதமான நிகழ்ச்சியாக இருப்பதால் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 15:25 [IST]
English summary
Royal enfield motoverse 2024 new launches all details
மேலும்... #royal enfield #india #Motoverse 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X