ராயல் என்பீல்டு லோகோவை மாத்த போகுதா! தரத்திற்காக பைக்கை வாங்கினவங்க இனி இந்த லோகோவுக்காவும் வாங்க போறாங்க!

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் அது புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிகவும் பிசியாக இருக்கின்றது. இதுதவிர, வேறு சில தனித்துவமான பணிகளையும் அது மேற்கொண்டு வருவது தற்போது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம், அது தற்போது பயன்படுத்தி வரும் சின்னத்தை (லோகோவை) மாற்ற இருப்பதே தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய லோகோவிற்காக வர்த்தக உரிமையைப் பெற்றிருக்கின்றது.

இதுகுறித்த ஆவணங்களே (Logo Trademark Application) தற்போது இணையத்தில் வாயிலாக வெளியாகி உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த செயலின் வாயிலாகவே அது தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்னத்தை மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் அதிக கவர்ச்சியானது என்றால் அது பயன்படுத்தி வரும் லோகோ அந்த பைக்குகளுக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

Royal enfield s new logo

இத்தகைய லோகோவை மாற்றுவதற்கான பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. ஒன்றல்ல, இரண்டு முத்திரைகளுக்கே அது காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் ஆவணங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. ஒன்று பிராண்டின் அசல் லோகோவை ஒத்திருக்கிறது, மற்றொன்று பழைய பள்ளி பேட்ஜைப் போல் காட்சியளிக்கின்றது.

இந்த சின்னங்கள் எப்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் சின்னத்தை மாற்றும் பணியில் மட்டுமல்ல புதுமுக பைக் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் அது தீவிரமாக உள்ளது.

அந்தவகையில், விரைவில் கெரில்லா 450 (Guerrilla 450) மற்றும் கிளாசிக் 650 (Classic 650) ஆகிய மாடல்களை அது விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த மாடல்களை தீவிர சாலை சோதனையோட்டத்திற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த புதிய பைக் மாடல்கள் புதிய சின்னத்துடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய சின்னம் பயன்பாட்டிற்கு வரும் எனில் இனி வரும் நாட்களில் அதன் பைக் மாடல்களின் பேனல்கள், பாகங்கள் மற்றும் பிற முக்கிய கூறுகளில் அந்த புதிய சின்னங்களே பொறிக்கப்பட்டு இருக்கும்.

ராயல் என்பீல்டு நிறுவனம் மேலே பார்த்த இரண்டு புதிய பைக் மாடல்களை மட்டுமல்ல விரைவில் தன்னுடைய இரட்டையர்கள் பைக் மாடலான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

650க்கு பதிலாக 750 சிசி பைக்குகளாகவே இவை விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறப்படுகின்றது. ஆகையால், பிராண்டின் அதிக பவர்ஃபுல்லான பைக் மாடலாக இவற்றின் வருகை அமையக் கூடும். இந்த புதிய தயாரிப்புகளும் நிறுவனத்தின் புதிய சின்னத்திலேயே வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த லோகோக்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலுக்காகவே தற்போது ராயல் என்பீல்டு காத்திருக்கின்றது. எனவே வரவிருக்கும் கெரில்லா 450 மற்றும் கிளாசிக் 650, ஆகிய பைக்குகளுடன் சேர்த்து கிளாசிக் 350, ஹிமாலயன் மற்றும் ஹண்டர் உள்ளிட்ட பைக் மாடல்களிலும் புதிய சின்னத்தை ராயல் என்பீல்டு பயன்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய தயாரிப்புகளை புதிய சின்னத்தின் வாயிலாக கவர்ச்சியாக்கும் பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. இது நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு பிளஸ்ஸாக மாறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 18:50 [IST]
English summary
Royal enfield new logo trademark filed in india here is more details
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+